தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுமற்சி காரணமாக இன்று மட்டும் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
30.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
31.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01.09.2023; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.09.2023 மகல் 05.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்புவனம் (சிவகங்கை), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்) தலா 15, புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்). நாமக்கல் தலா 11, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 10, சிறுடிை (திருச்சி), எருமப்பட்டி (நாமக்கல்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பெரியளைம் (தேனி) தலா 8 என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் காண்க:
சரசரவென்று உச்சிக்கு ஏறிய தங்கம்- சவரனுக்கு விலை எவ்வளவு?
தேசிய விதைகள் கழகத்தில் 89 காலிப்பணியிடம்- AGRI பயின்றவர்களுக்கும் வாய்ப்பு