Others

Saturday, 30 April 2022 08:55 AM , by: Elavarse Sivakumar

உலக நாடுகளில் தற்போது, சாக்லெட் தொற்று நோய் பரவிவருகிறது. பெல்ஜியம் உட்பட 10க்கும் மேற்பட்ட சில நாடுகளில் சாக்லெட் சாப்பிட்ட 151 குழந்தைகள், 'சால்மோனெல்லா' என்ற நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாக்லெட் என்பது, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் ஒரு திண்பண்டம். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் சாக்லெட் என்றால் அடம்பித்து அழுது வாங்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தயாரிக்கப்படும் சாக்லெட்கள் உலக அளவில் பிரசித்தம் பெற்றவை. இந்தியா உட்பட, 113 நாடுகளுக்கு இந்த சாக்லெட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், பெல்ஜியம் சாக்லேட் வாயிலாக, 'சால்மோனெல்லா' எனும் நோய் தொற்று பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில், இந்த சாக்லெட்டை சாப்பிட்ட 150 குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.குறிப்பாக 11 நாடுகளில் இந்தத் தொற்றுப் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக லண்டனில் 65 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒன்பது குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.

பரவுவது எப்படி? (How to spread?)

சால்மோனெல்லா என்பது, 'பாக்டீரியா' தொற்று. இது விலங்குகளின் உடல்களில் காணப்படும். குறிப்பாக, பண்ணை கோழிகளிடம் இந்த பாக்டீரியா தென்படும். 'டைப்பாய்டு' காய்ச்சல் இந்த பாக்டீரியா மூலம்தான் ஏற்படுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்ட இரண்டு மணி நேரத்தில் காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் ஆபத்து இல்லை.

அறிகுறிகள் (Symptoms)

பசியின்மை, உடல்வலி, 104 டிகிரி வரை காய்ச்சல், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, தலைவலி உள்ளிட்டவைகள் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.

தவிர்க்க வேண்டியவை

இந்த நோய் தரமற்ற உணவு மூலம் பரவுகிறது. குறிப்பாக கெட்டுப்போன உணவுப் பொருட்கள், பச்சையான பால் பொருட்கள், நன்கு வேக வைக்காத இறைச்சி வாயிலாக பரவுகிறது. தற்போது சாக்லேட் மூலம் இந்த நோய் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...

மனஅழுத்தத்தைக் குறைத்து, ஆயுளை அதிகரிக்கும் Brisk Walk!

உடல் பருமனைக் குறைக்க உதவும் மாம்பழம்- இத்தனை நன்மைகளா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)