வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதியானதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோவிட் தொற்று பரவி, பாடாய் படுத்தி வருகிறது. இதுவரை மொத்தமாக 51.92 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர.
வடகொரியாவில் மட்டும் கோவிட் தொற்று ஏற்படவேயில்லை என அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வந்தது.
கொரோனா (Corona)
இந்நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கோவிட் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட் அந்த நபர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதனை தொடர்ந்து கோவிட்டை கட்டுப்படுத்தும் விதமாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
ஒருவருக்கு கொரோனா வந்ததால், நாட்டிற்கே ஊரடங்கை அறிவித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
மேலும் படிக்க
கொரோனா பேரிழப்புகளை படம் பிடித்த இந்தியருக்கு புலிட்சர் பரிசு!