அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (ஏஐசிபிஐ) 129 புள்ளிகளுக்கு மேல் இருப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வுடன், நிலுவைத்தொகையும் அடுத்த மாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இனி 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும். பணவீக்கம் அதிகரித்து வரும் இக்கட்டான சூழ்நிலையில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் மாதம்
இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரிப்புடன், அவர்களின் டிஏ நிலுவைத் தொகை பற்றிய செய்தியை அரசு வெளியிட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில், ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டபின், ஊழியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. தற்போது வெளியான அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் சம்பளம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 முறை
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் இருமுறை அகவிலைப்படியை உயர்த்த பரிசீலித்து வருகிறது. இந்த திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்த பிறகு 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக அகவிலைப்படி அதிகரித்துள்ளது. தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (ஏஐசிபிஐ) 129 புள்ளிகளுக்கு மேல் இருப்பதைக் கருத்தில் கொண்டு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
நிலுவைத்தொகை
செப்டெம்பர் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டு அகவிலைப்படியுடன் கிடைக்கும் என்றும் இதனுடன் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
எவ்வளவு உயரும்?
இந்த அறிவிப்பின் மூலம் ஒரு ஊழியரின் சம்பளம் ரூ. 20,000 எனில், அவருக்கு 34 சதவீதம் என்ற விகிதத்தில் ரூ.6,800 அகவிலைப்படியாக இருந்தது. இப்போது அவருக்கு 38 சதவீத அகவிலைப்படி ரூ.7,600 கிடைக்கும், இந்த வகையில் ஊழியரின் சம்பளம் மாதம் ரூ.800 அதிகரிக்கும்.
மேலும் படிக்க...