அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அடுத்த மாதம் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக, ஜூலை மாதத்தில் ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு வழியாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இப்போது ஊழியர்களின் சம்பளம் 40,000 ரூபாயாக அதிகரிக்கப் போகிறது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
6% உயர்வு
அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI) தொடர்பான தரவுகளின்படி, 5 சதவீத அகவிலைப்படி உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மே மாதத்திற்கான பணவீக்கம் அதிகரித்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் அதிகரிக்கலாம்.
எவ்வளவு அதிகரிக்கும்?
உண்மையில், அகவிலைப்படி அதிகரிப்பு AICPIஇன் தரவைப் பொறுத்து இருக்கும். 2022 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏஐசிபிஐ குறியீடு உயர்ந்தது. இதன் காரணமாக அகவிலைப்படியில் 5 சதவீதம் உயர்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இப்போது புதிய புள்ளி விவரங்களின்படி, ஊழியர்களின் அகவிலைப்படி 6 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
புள்ளிவிவரங்கள்
ஜனவரியில் AICPI குறியீடு 125.1 ஆகவும், பிப்ரவரியில் 125 ஆகவும், மார்ச் மாதத்தில் 126 ஆகவும் ஒரு புள்ளி அதிகரித்தது. இப்போது ஏப்ரல் மாதத்திற்கான தரவுகளின்படி, ஏஐசிபிஐ குறியீடு 127.7 ஆகக் குறைந்துள்ளது. இதில் 1.35 சதவீதம் அதிகரித்து, தற்போது மே மாதத்திற்கான எண்ணிக்கை வரவுள்ளது. மே மாதத்திலும் இந்த எண்ணிக்கை அதிகரித்தால், அகவிலைப்படியில் 6 சதவீத அதிகரிப்பு இருக்கலாம்.
மத்திய அரசு 6 சதவீத அகவிலைப்படியை உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயரும்.
அதிகபட்சம்
ஊழியரின் அடிப்படை சம்பளம் = ரூ.56,900
புதிய அகவிலைப்படி (40%) = ரூ.22,760/மாதம்
அகவிலைப்படி இதுவரை (34%) = ரூ.19,346/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி? = 22,760-19,346 = ரூ.3,414/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 3,414 X12 = ரூ.40,968
குறைந்தபட்சம்
ஊழியரின் அடிப்படை சம்பளம் = ரூ.18,000
புதிய அகவிலைப்படி (40%) = ரூ.7,200/மாதம்
அகவிலைப்படி இதுவரை (34%) ரூ.6120/மாதம்
எவ்வளவு அகவிலைப்படி? = 7200-6120 = ரூ.1080/மாதம்
ஆண்டு ஊதிய உயர்வு 1080 X12 = ரூ.12,960
மேலும் படிக்க...