அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பை இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை மாதம் முதல் 3 % உயருகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிவர்த்தியாகிறது. உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களும் மாநில அரசு ஊழியர்களும் தங்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது கிடைக்கும் என்று காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜூலை அதாவது அடுத்த மாதத்தில் 5 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிரடி அறிவிப்பு
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு இப்போது அகவிலைப்படி தொடர்பான அறிவிப்பை உத்தரகாண்ட் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்தரகாண்ட் அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் அதன் பலன் கிடைக்கும். அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது.
2.5 லட்சம் பேர்
உத்தரகாண்ட் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவலை அம்மாநில நிதித்துறை வெளியிட்டுள்ளது. ஊழியர்களுக்கு இனி 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் இந்த முடிவால் அங்குள்ள சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். உத்தரகாண்ட் அரசின் இந்த முடிவு அரசு ஊழியர்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகவிலைப்படி ஏன்?
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் வாழ்க்கைச் செலவுகளைக் கையாள அகவிலைப்படி வழங்கப்படுகிறது. பணவீக்கம் உயர்ந்த பிறகும், பணியாளரின் வாழ்க்கைத் தரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை அரசு செய்து வருகிறது.
எப்போது உயரும்?
ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, மத்திய அரசுடன் அனைத்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது வழக்கம். பணவீக்க விகித தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி குறித்து அரசு முடிவெடுக்கிறது. அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கத்தைப் பொறுத்தே இருக்கும். ஆனால், ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும் படிக்க...