அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 February, 2023 10:24 PM IST

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 42 சதவீதமாக உயர்த்த  மோடி அரசு  முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது. இந்த ஆண்டு ஒரு சிறப்பு வாய்ந்த ஆண்டாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்.

பொதுவாக பணவீக்கம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகும். அதை வைத்தே இந்த முறை அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது தெரியவரும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படலாம். இம்முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள திருத்தம் அடுத்த ஊதியக் குழுவில் பொருத்துதல் காரணி (ஃபிட்மெண்ட் காரணி) மூலம் மேற்கொள்ளப்படும். ஏழாவது ஊதியக் குழுவுக்குப் பிறகு அடுத்த ஊதியக் குழு தேவையில்லை என்று அரசு கூறுகிறது.


10 ஆண்டுகளுக்கு

அரசு ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தாமல் ஆண்டுதோறும் உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது. இதன் மூலம், கீழ்நிலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, உயர் பதவியில் அமரும் அதிகாரிகளுக்கு இணையான சம்பளம் பெறும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சம்பள கமிஷன் அமைக்க இன்னும் ஒரு வருடமே உள்ளது. இதற்கு முன்னதாக, ஊழியர்களின் சம்பளத்தை திருத்துவதற்கான புதிய ஃபார்முலாவை அரசாங்கம் அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டில் ஏழாவது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஃபிட்மென்ட் காரணி அடிப்படையில் அடிப்படை சம்பளத்தை உயர்த்தி ஊழியர்களின் சம்பளம் மாற்றப்பட்டது. உயர் மட்ட ஊழியர்கள் மட்டுமே இதன் மூலம் பயனடைந்தனர். கீழ்மட்ட ஊழியர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கொடுத்த பார்முலா மீது அரசு கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

25 லட்சம் வரை

இதேபோல்,  பெரிய அறிவிப்பு வீடு கட்டும் அலவன்ஸ் (HBA) பற்றிய அறிவிப்பும் வெளியாகும்.  தற்போது, வீடு கட்ட அல்லது பழுது பார்க்க முன்பணமாக அரசு வழங்கும் பணத்தின் வட்டி விகிதம் 7.1%. இதன்படி, ஊழியர் 25 லட்சம் வரை முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம். இப்போது இந்தத் தொகை 30 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வட்டி விகிதம் 7.1% லிருந்து 7.5% ஆக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

4% வரை

பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அகவிலைப்படியும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Dearness allowance hikes to 42% - jackpot for central government employees?
Published on: 02 February 2023, 10:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now