மனிதர்களின் வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறப்பு வரை மரங்களின் பங்கு இணைபிரியாமல் தொடர்கிறது. அதனால் மரம், செடி கொடிகளுக்கும் நமக்குமான பந்தம் தொட்டுத் தொடரும் பாரம்பரியம் ஆகும். அவை அழகைத் தருவது மட்டுமல்லாமல், சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகின்றன. நாம் உண்ணும் உணவுக்கான ஆதாரமாகவும் உள்ளன.
ஆனால் சில தாவரங்கள் உயிரைப் பறிக்க கூடியவை. சில நொடிகளிலேயே இறப்பை ஏற்படுத்தும் சில விஷ செடிகள் மற்றும் பூக்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த தகவல் உங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கலாம். சந்தேகத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் உண்மை அதுதான்.
Hogweed
Hogweed என்று பெயரிடப்பட்ட இந்தத் தாவரம் Heracleum mantaegium என்று அழைக்கப்படுகிறது. இந்தச் செடியும், அதன் பூக்களும், மிகவும் விஷத்தன்மை கொண்டவை. பூவை யாராவது தொட்டாலே உடலில் காயங்கள் ஏற்படும். மேலும், இது சருமத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஹாக்வீட் பூக்கள் தோல் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.
அகோனிட்டம்
உலகின் மிக நச்சு தாவரங்களில் அகோனிட்டமும் ஒன்று. தாவரத்தின் இலைகள் மற்றும் வேர்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அதனை தொட்டாலே ஒரு நபரின் இதயத் துடிப்பு நின்று விடக் கூடும். தாவரத்தின் வேரில் இருக்கும் விஷம் நேரடியாக மூளையைத் தாக்கி மரணத்தைப் பரிசளிக்கும். தவறுதலாக இதனைச் சாப்பிட்டுவிட்டால், மரணம் நிச்சயம்.
Ricinus comunis (Ricinus)
Ricinus comunis (Ricinus) புதர் வகை செடி மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இது ரிசின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புதர் மனித உடலில் உள்ள செல்களை அழிக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாக, முதலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
மான்கினில்
மான்கினில் தாவரமும் மிகவும் ஆபத்தானது. இது கரீபியன் தீவுகளில் அதிகளவில் காணப்படுகிறது. இவை ஹிப்போமேன் மான்சினிலா என்றும் அழைக்கப்படுகிறது. செடியின் மீது விழும் நீரை யாராவது தொட்டால் அவரது உயிர் போய்விடும். இந்தச் செடியை எரித்த பிறகு, ஏற்படும் அதன் புகை கண்களை குருடக்கும். இதனுடன், அவருக்கு சுவாச நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
அஃப்ரின்
ஆபத்தான தாவரங்களின் பட்டியலில் அஃப்ரின் என்ற தாவரமும் உண்டு. இது ஒரு சிவப்பு பெர்ரி போல தோற்றமளித்தாலும், அது ஒருவரைக் கொல்லும் விஷத்தன்மையைத் தன்னுள்ளே தக்கவைத்துள்ளது. அதன் பழங்களின் விதைகள் மிகவும் ஆபத்தானவை. இதன் விதையை ஒருவர் எதிர்பாராதவிதமாகச் சாப்பிட்டால்கூட இறப்பு நேரும்.
மேலும் படிக்க...
ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!
பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!