Others

Sunday, 12 March 2023 09:48 PM , by: R. Balakrishnan

Cylinder subsidy

சமையல் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது.

சிலிண்டர் மானியம் (Cylinder Subsidy)

அரசு தரப்பிலிருந்து மானியம் நிறுத்தப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ஆனாலும் நிறையப் பேருக்கு சமையல் சிலிண்டர் மானியம் வருகிறதா, இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. மானியம் வரவே இல்லை என்று பலர் கூறினர். எனினும் சென்ற ஆண்டில் மானியத் தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்கத் தொடங்கியது. நிறையப் பேருக்கு மானியத் தொகை வந்ததா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். அதை கண்டுபிடிப்பது எளிதான காரியம் தான். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டில் அமர்ந்து கொண்டே ஆன்லைன் மூலமாகவே பார்க்கலாம்.

எப்படி தெரிந்து கொள்வது?

Mylpg.in என்ற வெப்சைட்டில் சென்று மெயின் பேஜில் இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களின் புகைப்படத்தில் நீங்கள் சிலிண்டர் வாங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடனே புதிய பக்கம் ஓப்பன் ஆகும். அதிலுள்ள பார் மெனுவுக்குச் சென்று ’Give your feedback online’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்களுடைய மொபைல் நம்பர், கஸ்டமர் ஐடி, மாநிலத்தின் பெயர், ஏஜென்சி பெயர் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். அதன் பிறகு, ‘Feedback Type’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து ’Complaint’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்க வேண்டும். இப்போது புதிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும்.

அதில் மானியத் தொகை வங்கிக் கணக்கில் வந்ததா, இல்லையா என்பதை நீங்கள் பார்க்கலாம்.

புகார்

ஒருவேளை உங்களுக்கு மானியத் தொகை வராமல் இருந்தால் 18002333555 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைத்து புகாரளிக்கலாம். புகார் கொடுத்த பிறகு உங்களுடைய மானியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

மேலும் படிக்க

1 ரூபாய்க்கு பயிர் காப்பீடு: மாநில அரசின் சூப்பர் திட்டம்!

உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)