2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடங்கப்பட்ட ஜன் தன் ஜோஜனா திட்டம் பற்றிய அறிவிப்பு அப்போது வெளியானது. ஏழை எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஜன் தன் யோஜனா (Jan Dhan Yojana)
ஜன் தன் யோஜனா திட்டத்தில் நிறைய வசதிகளும் சலுகைகளும் உள்ளன. அதில் முக்கியமான ஒரு வசதிதான் ஓவர் டிராஃப்ட். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களுடைய ஜன் தன் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் கூட நீங்கள் 10,000 ரூபாய் வரை வித்டிரா செய்ய முடியும். ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் இதை நீங்கள் எடுக்கலாம்.
முதலில் இத்திட்டம் தொடங்கப்பட்ட சமயத்தில் ஓவர் டிராஃப்ட் முறையில் 5000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்.
இதன் பின்னர் அது இரட்டிப்பாக்கப்பட்டு 10,000 ரூபாய் வரை எடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது. 2000 ரூபாய் வரை மட்டுமே நிபந்தனை இல்லாமல் எடுக்க முடியும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்த குறைந்தது 6 மாதங்களுக்கு ஜன் தன் கணக்கை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
அப்போதுதான் 10,000 ரூபாய் எடுக்க முடியும். இல்லாவிட்டால் 2000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறுவதற்கான வயது வரம்பு 60லிருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க