இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் சேர தற்போது முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் சேமிப்பு கணக்கு (Postal Savings Account)
இந்திய அஞ்சல் துறை செல்வ மகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், மாதாந்திர வருமானத் திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம், மூத்த குடிமகள் போன்ற பல வகையான சேமிப்பு திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிறுசேமிப்பு திட்ட கணக்குதாரர்கள் தங்களது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது கணக்கு வைத்துள்ளவர்கள் 2023 செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக கணக்கு தொடங்கவுள்ளவர்கள் 6 மாதத்திற்குள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் சேமிப்பு திட்டத்தில் முதலீட்டின் அளவு அதிகரிக்கும் போது பான் கார்டு எண்ணையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!