நிறையப் பேருக்கு ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்கும்போது கிழிந்த நோட்டு வந்திருக்கலாம். மெஷினில் சிக்கி நோட்டு கிழிந்திருக்கலாம். அவ்வாறு கிழிந்த நோட்டு உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? அது வீணாகிவிடுமா? அதற்கான தீர்வு என்ன.
ஏடிஎம்களில் கிழிந்த நோட்டுகள் வந்தால் கூட பிரச்சனையில்லை, இதை கண்டு அஞ்ட வேண்டாம். பெரும்பாலும் சில்லறை மாற்றும்போது நமக்கே தெரியாமல் கிழிந்த நோட்டு நம்மிடம் வந்துவிடுவது, இயல்பு. பேருந்துகளில் சில்லறை மாற்றும்போது நிறையப் பேருக்கு கிழிந்த நோட்டு வந்திருக்க வாய்ப்பு அதிகம். சிலருக்கு வேறு சில காரணங்களுக்காகவும் கிழிந்த அல்லது துண்டான நோட்டுகள் வந்திருக்கும். ரூபாய் நோட்டுகள் பல காரணங்களால், இவ்வாறு கிழிகின்றது, எனவே இந்த நோட்டுகளை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே காணுங்கள்.
இதுபோன்ற கிழிந்த பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால், அருகிலுள்ள வங்கிக்கு செல்லவும், அங்கு அவர்கள், உங்களுடைய பழைய அல்லது புது கிழிந்த நோட்டுகளை சரிபார்த்து, வேறு நோட்டுகளை மாற்றித் தருகின்றனர். நிறையப் பேருக்கு இது குறித்த தகவல் தெரிவதில்லை. எனவே இனி உங்களிடம் கிழிந்த நோட்டிருந்தால் பயப்பட தேவையில்லை.
ஏடிஎம்களில் இதுபோன்ற கிழிந்த நோட்டுகள் வந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று, நீங்கள் எழுதிக் கொடுக்க வேண்டும். பணம் எடுத்த தேதி, நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும். பணம் எடுத்தற்கான ரசீது, SMS போன்ற விவரங்களும் தேவைப்படும்.
இவை அனைத்திருக்கும் முன்னர், ஏடிஎம்களில் பணத்தை எடுத்ததும் சரிபார்த்து, நீங்கள் மெஷினில் இருந்து வெளியெடுத்த நோட்டு கிழிந்திருந்தால், அதை உடனே ஏடிஎம்களில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் காட்டவும், இது உங்களுக்கு வங்கிகளில் உங்கள் வாதத்தை எடுத்து வைக்க கூடுதலாக உபயோகமாக இருக்கும். எனவே கவனமாக செயலாற்றுங்கள்.
ஏடிஎம்களில் எடுக்காமல் வேறு வகையில், உங்களிடம் கிழிந்த நோட்டுகள் வந்திருந்தாலும் அதையும், நீங்கள் வங்கிகளிலேயே மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும், உங்களுக்கு உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ரூபாய் நோட்டுகள் கிழிந்திருக்கும் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட மதிப்பில் வேறு நோட்டுகள், உங்களுக்கு வழங்கப்படும். அதே நோட்டு மதிப்புக்கு பெரும்பாலும் கிடைக்காது என்பதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: