பேக்கரி பொருட்கள் மற்றும் சாக்லேட் தயாரிப்பு தொழில் தொடங்கி நீங்களும் தொழில் முனைவோராகவோ, தொழில் அதிபராகவோ மாறுவதற்கு ஆசையா? உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்புக் காத்திருக்கிறது. தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் அடுமனைப் பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
வேளாண் படிப்பு (Agricultural Studies)
கோவையில் இயங்கிவரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் குறித்து மாணவர்களுக்குக் கற்பிப்பதுடன், விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும் பணியையும் செய்து வருகிறது.
தொழில்முனைவோராக மாற (Become an Entrepreneur)
சான்று பெற்ற பயிர் ரகங்களை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சாகுபடித் தொழில்நுட்பம், அதிக மகசூலுக்கான சூட்சமம் என விவசாயத்திற்கு இன்றியமையாத விஷயங்களையும் வேளாண் பல்கலைக்கழகம் கற்றுக்கொடுத்து வருகிறது.
அதேநேரத்தில் தொழில் முனைவோராக மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கும் ஆலோசனை வழங்குவதிலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பணி இன்றியமையாதது.
அடுமனைப் பொருட்கள் (Household items)
குறிப்பாக அடுமனைப் பொருட்கள் அதாவது பேக்கரி பொருட்கள், சாக்லேட் மட்டும் மிட்டாய் வகைகளுக்கு தற்போது, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஏனெனில், இவை விரும்பத்தக்க வகையிலும், பற்பலச் சுவைகளிலும் கிடைப்பதே முக்கியக் காரணம்.
2 நாள் பயிற்சி (2 days training)
எனவே இது தொடர்பாக தொழில்முனைவோராக விரும்புவோரை ஊக்குவிக்கும் வகையில், அடுமனைப் பொருட்கள், சாக்லேட்டுகள் மற்றும் மிட்டாய்கள் தயாரிக்கும் 2 நாட்கள் பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் 05.04.2022 மற்றும் 06.04.2022 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்தின் இந்த முயற்சி தொழில் முனைவோராக விரும்புவோர், தங்களது வருமானத்தைப் பெருக்கப் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே, பயிற்சியின்போது கீழ்க்காணும் அடுமனைப் பொருட்கள், சாக்லேட் மற்றும் மிட்டாய் வகைகள் எளிய முறையில் தயாரிப்பதற்கான தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தயாரிப்புப் பயிற்சி
-
ரொட்டி வகைகள்
-
கேக் மற்றும் பிஸ்கட் வகைகள்
-
சாக்லேட்
-
கடலை மிட்டாய்
-
சர்க்கரை மிட்டாய் வகைகள்
முன்பதிவு அவசியம்
இத்தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் ஏனைய ஆர்வலர்கள் ரூ.1,500/- + 18% GST செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 0422-6611268 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!