சில வேடிக்கையான விஷயங்கள் எப்போதும் நமக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தர வல்லது. அப்படி ஒரு சம்பவம் தான் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. ஆந்திராவில், வளர்ப்பு நாய் பணப்பையை வாயில் கவ்விக் கொண்டு ஓடி, அதை தொலைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பணப்பை (Money Bag)
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள நாச்சினபள்ளி கிராமத்தில், ஆடு மேய்த்து வருபவர் செராலா. இவர், இரு நாட்களுக்கு முன் சந்தைக்கு சென்று ஆடுகளை விற்று, 1.50 லட்சம் ரூபாயுடன் வீட்டிற்கு வந்தார். பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு குளிக்க சென்றார்.
அப்போது, அங்கு வந்த அவரின் வளர்ப்பு நாய், கட்டிலில் இருந்த பணப்பையை வாயில் கவ்விக் கொண்டு ஓடியது. குளித்து விட்டு திரும்பிய செராலா, கட்டிலில் வைத்த பணப்பையை காணாமல் பதறி தேடினார்.
அப்போது அக்கம்பக்கத்தினர், அவருடைய நாய் ஒரு பையை கவ்விக் கொண்டு ஓடியதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவர் பல இடங்களில் தேடியும் பணப்பை கிடைக்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆடு மேய்த்து தனது வாழ்வை நடத்தி வரும் இவருக்கு, இது பெரும் சோகமான நிகழ்வு தான். விரைவில் இவரது பணம், திரும்ப கிடைக்க வேண்டும், அப்போது தான், அவர் நிம்மதி அடைவார்.
மேலும் படிக்க
இணையத்தில் வைரல்: லாரியில் தொற்றிக் கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்!
அதிர்ச்சி சம்பவம்: மகளை நரபலி கொடுக்கத் மந்திரவாதியுடன் கூட்டு சேர்ந்த தந்தை!