நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசு ரேஷன் கார்டு வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம், பல வகையான அரசு திட்டங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கார்டு ஒரு முக்கியமான ஆவணம் என்பதைத் தவிர, உங்களுக்கான அடையாள அட்டையாகவும் இது செயல்படுகிறது.
இதனுடன், இது ஒரு குடியிருப்பு சான்றிதழ் போலவும் செயல்படுகிறது. மேலும் இது குடியிருப்புச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல சான்றிதழ்களை உருவாக்க உதவுகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ளாம்.
ரேஷன் அட்டை பெற விண்ணப்பித்தல்
இன்டர்நெட் பயன்பாடு எளிதாகி உள்ள இந்த காலகட்டத்தில், ரேஷன் கார்டு வாங்க ஆன்லைன் வசதியை அரசு வழங்கியுள்ளது. அதன்படி நீங்கள் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ரேஷன் கார்டுக்கு நீங்கள் நுகர்வோர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- முதலில் இந்த இணையதளத்தை (https://fcs.up.gov.in/FoodPortal.aspx) பார்வையிட வேண்டும்.
- அதன் முகப்புப் பக்கத்தில் உள்நுழைந்து 'NFSA 2013' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, சில விவரங்களை அங்கு நிரப்ப வேண்டும்.
- ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்குப் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பின்னர் ரேஷன் கார்டு கட்டணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பி என்கிற பொத்தானை கிளிக் செய்யவும்.
ரேஷன் கார்டுக்கு 5 முதல் 45 ரூபாய் வரை செலவாகும். ஒவ்வொருவரும் அவரவர் பிரிவின்படி ரேஷன் கார்டுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனுக்குப் பிறகு, உங்களின் இந்தத் தகவல்கள் ஃபீல்டீல் இருக்கும் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். உங்களுடைய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் சரியாக இருந்தால், ஒரு மாதத்திற்குள் உங்கள் ரேஷன் கார்டு துறையால் வழங்கப்படும்.
மேலும் படிக்க
வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!