Others

Tuesday, 03 May 2022 12:04 PM , by: Elavarse Sivakumar

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவுகளின் விலை இமயமலைய அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் உணவுப் பொருட்களை வாங்கவும் கடுமையாகத் திண்டாடுவதுடன், ஹோட்டலுக்குச் செல்வதற்கும் தயங்கும் நிலை உருவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஏராளமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்து விலைவாசி எகிறியுள்ளது. ஆளும் அரசின் தவறானப் பொருளாதாரக் கொள்கைகளே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனால் இலங்கை மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான இலங்கை குடிமக்கள் உணவு வாங்க கூட பணமில்லாமல் வீதிகளில் இறங்கி போராடினர். மேலும், ஆட்சியாளர்கள் பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் போராடி வருவதால் அரசியல் நெருக்கடியும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் உணவு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதற்கு உதாரணமாக சமூக வலைதளங்களில் ஒரு உணவகத்தின் பில் வைரலாக பரவி வருகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் இயங்கி வரும் இந்த உணவகத்தின் பில் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இதில் ஒரு செட் இட்லி (இரண்டு இட்லி) விலை 350 ரூபாய். கேட்கும்போதே, நமக்குத் தலையேச் சுற்றுகிறது. ஒரு தயிர் வடை விலை 350 ரூபாய். ஒரு சாம்பார் வடையின் விலை 350 ரூபாய். ஒரு ஆனியன் ரவா தோசையின் விலை 750 ரூபாய் என அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்கின்றனர். இதுபோக ஒரு பட்டர் நான் விலை மட்டும் 400 ரூபாய். ஒரு மீடியம் சில்லி பனீர் கிரேவி விலை 1100 ரூபாய் என்பதெல்லாம் மிகப்பெரிய ரேட்தான். ஒரு மினரல் வாட்டர் பாட்டில் விலை 100 ரூபாய். கடைசியாக ஒரு ஃபில்டர் காபி விலை 300 ரூபாய் என அந்த பில்லில் போட்டிருக்கிறது. மொத்தமாக பில் கட்டணம் 4750 ரூபாய் செலுத்தியுள்ளனர்.

அடிப்படை தேவையான உணவுக்கே இவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்றால் இலங்கையில் பொருளாதார நெருக்கடியும், பணவீக்கமும் எந்த அளவுக்கு உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
எது எப்படியோ, உணவுக்கும், உணவுப் பொருட்களுக்கு நாம் செலவிட வேண்டியது கட்டாயம் தானே.

மேலும் படிக்க...

தங்கம் விலையில் திடீர் வீழ்ச்சி-சவரனுக்கு ரூ.384 குறைவு!

புற்றுநோய்க்கு வித்திடும் டால்கம் பவுடர்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)