வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாகனத்தை நன்கு ஓட்டத் தெரிந்திருந்தால் போதும். இதுதவிர, 8 போட்டுக்காட்டினால் அவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கலாம் என்கிறது போக்குவரத்து விதி.
அந்த வகையில் தெலங்கானாவைச் சேர்ந்தக் குள்ளமானவர் ஒருவர் கார் ஓட்ட ஆசைப்பட்டார். கரீம்நகரைச் சேர்ந்த கட்டிபள்ளி ஷிவபால் 42, தற்போது ஐதராபாதில் வசித்து வருகிறார்.
உயரமேத் தடை (Height restriction)
3 அடி உயரமுள்ள அவர் 2000ல் ஐதராபாதில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வேலை பார்த்தே 2004ல் பட்டம் பெற்றார். கார் ஓட்ட வேண்டும் என்பது இவரது ஆசை. ஆனால் உயரம் அதற்கு தடையாக இருந்தது. இந்நிலையில், இன்டர்நெட்டில் பார்த்தபோது உயரம் குறைவான ஒருவர் தனக்கு ஏற்றபடி காரை மாற்றியமைத்தது குறித்து தெரிந்து கொண்டார்.
அதையடுத்து காரை வாங்கி தன் உயரத்துக்கு ஏற்ப அதில் மாற்றங்கள் செய்தார். நண்பர்கள் உதவியுடன் கார் ஓட்டப் பழகினார். ஆனால் வாகன ஓட்டுனர் உரிமம் பெற இயலவில்லை.
குறிப்பிட்ட உயரம் (Specific height)
சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட உயரம் இருந்தால் மட்டுமே ஓட்டுனர் உரிமத்தைப் பெற முடியும். போக்குவரத்து உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து அவருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டிலேயே மிகவும் உயரம் குறைவான நபருக்கு லைசென்ஸ் வழங்கப்படுவது இதுவே முதல்முறை.
பயிற்சி (Training)
தன்னைப் போல் உள்ளவர்களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் கார் ஓட்டப் பயிற்சி அளிக்கப்போவதாக ஷிவபால் கூறியுள்ளார்.
இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்தால், எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நபரே சாட்சி. அந்த சாதனைக்க உயரம் ஒருபோதும் தடையிலை என்பதை நிரூபித்திருக்கிறார்.
மேலும் படிக்க..
மழையால் பாதித்த 20,000 ஏக்கர் பயிர்கள்: பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!
பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்: பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்ட வாகனஓட்டிகள்!