இந்தியாவில் மின்சார வாகனங்கள் வெகு விரைவாக பிரபலமடைந்து விட்டது. குறிப்பாக, எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நாட்டு மக்கள் மத்தியில் அருமையான வரவேற்பு கிடைத்தது. எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையும் சந்தையில் சூடுபிடித்தது. இந்த மாதிரியான சூழலில் சமீப காலமாக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து எரிந்து விப்த்தில் சிக்குவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இந்தியாவில் கோடை வெயில் தொடங்கிய பின்பு மின்சார இருசக்கர வாகனங்கள் பல தீ விபத்து சம்பவங்கள் நடந்துவிட்டது.
எலக்ட்ரிக் கார் (Electric Car)
இந்த நிலையில், தற்போது மின்சார கார் ஒன்று திடீரென தீ விபத்தில் சிக்கியுள்ளது என அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறியிருக்கிறது. தீ விபத்திற்கான காரணம் என்னவென்று இன்னும் முழுமையாக தெரியவில்லை.
இந்த கார் தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றான நெக்ஸான் இவி தான் தீ விபத்தில் சிக்கிய எலக்ட்ரிக் காராகும். இந்த வாகனமே மர்மமான முறையில் தீ விபத்தை சந்தித்துள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையும், தீயணைப்பு துறையும் மிகக் கடுமையாக போராடினர். இருப்பினும், காருக்கு அடியில் தீ பிடித்திருந்ததால், அதனை கட்டுக்குள் கொண்டு வர சிக்கல் ஏற்பட்டது.
ஆய்வு (Inspection)
தீ விபத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து டாடா மோட்டார்ஸ் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உண்மையாக்கும் வகையில் தற்போது, டாடா மோட்டார்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், 'சமூக ஊடகங்களில் டாடா நெக்ஸான் இவி தீ விபத்துக்குள்ளான வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் உண்மை நிலையை கண்டறிய தற்போது, விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முழுமையான விசாரணைக்குப் பிறகு தான் விரிவான பதிலைத் தர முடியும். எங்கள் வாகனங்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். சுமார் 4 வருடங்களில் 30,000-க்கும் மேற்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் நாடு முழுவதும் விற்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும், 1 மில்லியன் கி.மீட்டருக்கும் மேல் பயணித்திருக்கிறது. இந்த மாதிரியான நிலையில் தான் இந்த சம்பவம் முதல் முறையாக நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் மின்சார வாகனங்கள் தொடர்பான தீ விபத்துகள், அதிகளவிலீ அரங்கேறி வருகிறது. இவற்றில் பலவற்றிற்கு இதுவரையிலும் காரணம் கண்டறியப்படவில்லை. இதை ஆய்வு செய்யும் பணியில் தீ விபத்தைச் சந்தித்த, அந்த வாகனங்களை தயாரித்த நிறுவனங்கள் களமிறங்கியிள்ளது. மத்திய அரசும், அதன் சார்பில் தனிக் குழுவை அமைத்து இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.
மேலும் படிக்க