மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 January, 2023 7:07 AM IST
Job Training

TN Govt Skill Training Courses: தமிழ்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளின் திறன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu Skill Development Corporation) கடந்த 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த, நிறுவனம் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறன்களை அதிகரிக்கும் விதமாக பல்வேறு பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

வேலைவாய்ப்பு பயிற்சி (Job Training)

இத்திட்டத்தின் கீழ் , கட்டுமானம், தோல், சில்லறை விற்பனை, கைவினைப் பொருட்கள், சுற்றுலா விருந்தோம்பல் போன்ற தொழிற் துறைகளின் கீழ் 150 முதல் 300 மணி நேரங்கள் (3 மாதம் முதல் 6 மாதங்க வரையிலாலான) கால அளவு கொண்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 2021-22ம் ஆண்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் கீழ் 79,304 பேர் பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். பயிற்சியை நிறைவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 90 நாட்களுக்குள் சான்றிதழ் பெற்ற தேர்வருக்கு ஏதாவதொரு நிறுவனத்தில் பணியமர்த்தம் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

  • திறன் பயிற்சிகளுக்கு பதிவு செய்ய https://candidate.tnskill.tn.gov.in/Candidate/Account/CandidateLogin என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
  • முகப்பு பக்கத்தில், 'Click Here to Register' என்பதை கிளிக் செய்யவும்
  • தொலைபேசி எண் (முதன்மையானது மற்றும் இரண்டாவது), ஆதார் எண், நிரந்தர முகவரி, வீட்டு முகவரி ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் தொலைபேசி எண்ணை முதன்மையானதாக சமரிப்பியுங்கள். ஆதார் எண் சரிபார்க்கப்படும். ஒரு முறை கடவுச் சொல்லை சமர்ப்பிக்க வேண்டும்.
  • உங்களைப் பற்றிய தனிப்பட்ட விவரங்கள், கல்வி விவரங்கள், தொடர்பு கொள்வதற்கான விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் (பயணப்படி, போக்குவரத்து செலவுகள் நேரடியாக வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்)
  • இறுதி கட்டமாக, உங்கள் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர், தனக்கு விருப்பமான துறையில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்குப் பிறகு, Assessment Agency -மூலம் விண்ணப்பதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில், தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், 90 நாட்களுக்குள் தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தமிழக விவசாயிகளுக்கு 10,000 ரூபாய் மானியம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

மூத்த குடிமக்களுக்கு அதிக பணம் கிடைக்கும் சேமிப்புத் திட்டம் இதோ!

English Summary: Employment after completion of training! Here is the government's wonderful plan!
Published on: 13 January 2023, 07:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now