திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப்பள்ளியில் காலியாக உள்ளப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வைணவத் திருத்தலம்
108 வைணவத் திருத்தலங்களில் முதல் இடம் பிடித்திருப்பது திருச்சி ஸ்ரீரங்கம் கோயில். தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளி உள்ளது.
இங்கு காலியாக உள்ள ஆகம ஆசிரியர், எழுத்தர், சமையலர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆகம ஆசிரியர்
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி (Education Qualification)
-
ஏதேனும் வேத ஆகம பாடசாலையில் 5 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்.
-
வைணவ ஆகமத்தில் தற்போது வேத ஆகம பாடசாலையில் 4 ஆண்டு பாடப்பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age Limit)
01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ. 36,000 – ரூ.1,14,400
சமையலர் (Cook)
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி (Education Qualification)
-
தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
-
50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பில் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது(Age)
01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ. 12,000
சமையல் உதவியாளர் (Assistant)
காலியிடங்கள் : 1
கல்வித் தகுதி (Education Qualification)
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது (Age)
01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ. 10,000
எழுத்தர் (Writer)
காலியிடங்கள்: 1
கல்வித் தகுதி (Education Qualification)
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது (Age)
01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ. 10,000
அலுவலக உதவியாளர் (Office assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி (Education Qualification)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது (Age)
01.07.2021 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் (Salary)
ரூ. 7,000
தேர்வு செய்யப்படும் முறை (Selection)
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க "https://srirangam.org/wp-content/uploads/2021/11/APP%20aplication.pdf"aplication.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி (Address)
இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006.
கடைசி தேதி (Deadline)
13.01.2022
மேலும் படிக்க...
வானிலை முன் அறிவிப்பு: விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் நிலையம்!
வேளாண் போராட்டம் விவசாயிகளுக்கு சிறந்த பயிற்சி - விவசாய சங்கம்!