Others

Sunday, 17 July 2022 08:42 PM , by: Elavarse Sivakumar

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதால், இதற்கான வேலைவாயப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக துறையின் கோயம்புத்தூரில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு வாரியான காலியிடங்கள் 

Mechanic - 02
Electrician - 01
Welder - 01
Carpenter - 01
Tyreman - 01
Copper & Tinsmith -01

சம்பளம் (Salary)

மாதம் ரூ.19,900 - ரூ.63,200

வயதுவரம்பு (Age Limit)

01.07.2021 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு சலுகை அளிக்கப்படும்.

தகுதி(Qualification)

அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
மெக்கானிக் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக, இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை(Selection Process)

டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக் கட்டணம் (Fee)

ரூ.400, விண்ணப்பப் படிவ கட்டணம் ரூ.100. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக (ஐபிஓ) எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியத் தபால்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் (சுய சான்று செய்யப்பட்ட) இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி(Address)

The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore - 641 001

கடைசி தேதி:

01.08.2022

மேலும் படிக்க...

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

லெகின்ஸை விரும்பும் இளம்பெண்கள் - பதறவைக்கும் பக்கவிளைவுகள்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)