ஆபத்துக்கு உதவுவது நட்பு என்பது உண்மைதான். அதற்காக நட்பாகப் பழகிய பள்ளித்தோழிகள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ முன்வந்துள்ளனர். மேலை நாடுகளில் கேள்விட்டிருந்த லெஸ்பியன் விவகாரம் தற்போதும் இங்கும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காதலான அன்பு (Loving love)
மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் பரோமிதா முகர்ஜி. இவரது தோழி சுரபிமித்ரா. மருத்துவர்களான இவர்கள் இருவரும், ஒன்றாகப் படித்தவர்கள்.
சிறு வயதில் இருந்தே ஒன்றாக இருந்தவர்கள்.
அதனால் இவர்களுக்குள் இருந்த அன்பு, ஒருவர் மீது ஒருவருக்கான ஈர்ப்பாக மாறி, பிறகு காதலாகக் கணிந்தது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்களே அதுபோல அவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள்.
ஒரே வீட்டில் வசிப்பு (Living in the same house)
லெஸ்பியன்களாக மாறிய இந்த மருத்துவர்கள் நாக்பூரில் பணி புரிந்து வருகிறார்கள். ஒரே வீட்டில் ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். வாழ்க்கையின் கடைசி வரை சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து இருப்பதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.
திருமணம் செய்ய முடிவு (Decided to get married)
பரோமிதா முகர்ஜி கூறியதாவது:-நானும், மித்ராவும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதை ஒளிவுமறைவின்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதை சொல்வதில் எங்களுக்கு வெட்கம் இல்லை.
முதலில் எதிர்ப்புத் தெரிவித்தப் பெற்றோர், எங்கள் இருவரின் எதிர்கால நலன் கருதி பின்னர் சம்மதம் தெரிவித்தனர். வாழ்நாள் முழுக்க நாங்கள் சேர்ந்து இருப்போம். இந்த ஆண்டுக்குள் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர் சுரபிமித்ரா கூறுகையில், எனது குடும்பத்தில் நான் லெஸ்பியனாக இருப்பது தெரியும். எனவே எனது திருமணத்துக்கு அவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே நாங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். கடைசி வரை நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.
நிச்சயதார்த்தம் (Engagement)
இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பரோமிதா முகர்ஜி, சுரபிமித்ரா ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் நாக்பூரில் நடைபெற்றது. இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பிறகு ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவித்து மகிழ்ந்தனர். உறவினர்கள் திரளாகக் கலந்து கொண்டு லெஸ்பியன் தம்பதியை வாழ்த்தினர்.
மேலும் படிக்க...