பெரும் பணக்காரர்கள் தாங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் அவர்களுடைய அந்தஸ்தை எடுத்துக் காட்டுவதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயல்பே. இதனால் பல பொருட்களை, 'கஸ்டமைஸ்டு ஐயிட்டங்கள் (Customized Items)'ஆக வைத்துக் கொள்வர். ஆனால் சிலவற்றில் அது முடியாது.
கேவியார் நிறுவனம்
உதாரணமாக ஐபோன் (iphone). இதில் தன்னுடைய அந்தஸ்தை தனியாக காட்டுவது எப்படி? எல்லாரிடமும் இருக்கும் போன்கள் ஒரே மாதிரி தான் இருக்கும். இங்கே தான்,'கேவியார்' போன்ற நிறுவனங்கள் தேவைப்படுகிறது.
ஆடம்பர பொருட்களை தயாரிக்கும் கேவியார் நிறுவனம், தற்போது சோனி பிளே ஸ்டேஷன் 5, ஐபோன் 13 புரோ, ஐபேடு மினி 6, ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஆகியவற்றுக்கான உறையை, தங்கத்தில் தயாரித்திருக்கிறார்கள்.
தங்கத்தால் ஆன உறை
தங்கத்தால் ஆன உறையை ஐபோனுக்கு போட்டுவிட்டால் போதுமானது; அது அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிடும்.
விலை - அது எல்லாம் நமக்கு கட்டுபடி ஆகாது. ஐபோன்13 விலை, 31 லட்சம் ரூபாயில் துவங்குகிறது. சும்மா தெரிந்து வைத்துக் கொள்ளலாம். அவ்வளவு தான்!
மேலும் படிக்க
வருகை தரப்போகிறது சூரிய சக்தியால் இயங்கும் மின்சார கார்கள்
120 மொழிகளில் தொடர்ந்து பாடிய கேரள மாணவி: கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை!