EPFO ஓய்வூதிய பயனாளிகளின் சொந்த தகவல்கள் இணையத்தில் கசிந்து கிடப்பதாக சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்து தகவல் வெளியிட்டுள்ளார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு (EPFO) நாடு முழுவதும் சுமார் 73 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். மேலும் சுமார் 2.7 கோடி பேர் பென்சன் நிதி வைத்துள்ளனர்.
பென்சனர்கள் (Pensionors)
லட்சக்கணக்கான EPFO ஓய்வூதிய பயனாளிகளின் விவரங்கள் இணையத்தில் வெளிப்படையாக திறந்தவெளியில் உள்ளது என பாப் டியசெங்கோ என்ற சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
EPFO ஓய்வூதிய பயனாளிகள் தொடர்பான சுமார் 28 கோடி பதிவுகள் இண்டர்நெட்டில் வெளிப்படையாக இருப்பதாகவும், இத்தகவல்களுக்கு Password பாதுகாப்பு கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கசிந்தது தகவல் (Information Leaked)
இதனால் ஓய்வூதிய பயனாளிகள் மோசடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். பென்சன் பயனாளிகளின் பெயர், UAN நம்பர், பிறந்த தேதி, பாலினம், திருமண நிலை, தொழில், மாநிலம், மாவட்டம், சமூகப் பிரிவு, வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இண்டர்நெட்டில் வெளிப்படையாக இருப்பதாக பாப் தெரிவித்துள்ளார்.
இதனால் பென்சன் கணக்குதாரர்கள் மோசடி தாக்குதலுக்கு ஆளாகலாம் என்பதாலும், ஓய்வூதியம் கொள்ளை அடிக்கப்படலாம் என்பதாலும் EPFO தரப்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க
PF கணக்கில் 40,000 ரூபாய் டெபாசிட்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?
பாலிசிதாரர்களுக்கு குட் நியூஸ்: இன்சூரன்ஸ் விதிமுறைகளில் மாற்றம்!