நம் வீட்டில் குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால் வீட்டை அலங்காரம் செய்து நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் அழைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வோம். சிலர் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக போய் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடுவார்கள். குறிப்பாக நாய்கள், பூனைகளுக்கு பிறந்த நாள் கொண்டாடுவார்கள்
சேவலுக்குப் பிறந்தநாள் (Rooster Birthday)
சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றும் ஒரு குடும்பம் சேவலுக்கு பிறந்தநாள் கொண்டாடி சேவலை வைத்தே கேக் வெட்டியுள்ளது. அந்த வீடியோவில் குடும்பத்தினர் சோபாவில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுடன் சேவலும் இருக்கிறது.
சுற்றிலும் நண்பர்கள் உறவினர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். அவர்கள் முன்பு கேக் ஒன்று இருக்கிறது. பின்னர் கேக் பற்ற வைக்கப்படுகிறது. பின்னர் சேவலின் காலில் கத்தி கொடுக்கப்பட்டு அதை வைத்து கேக் வெட்டப்படுகிறது. சுற்றியிருந்தவர்கள் "Happy Birthday" பாடலை பாடி சேவலின் பிறந்தநாளை கொண்டாடினர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க