2 மாதக் குழந்தையை வைத்து ஒரு தந்தை சூதாடிய சம்பவம் மற்றவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சூதாட்டம், சீட்டாட்டம் என்றெல்லாம் வருணிக்கப்படும், சூது, ஆடுவோரின் வம்சத்தையே நாசமாக்கிவிடும். முன்பெல்லாம் மக்களிடையே மதுபோதை போல, சூதுபோதையே வியாபித்திருந்தது.
சூதாட்டத்திற்கு அடிமையாகும் சிலர், தங்கள் வெற்றிக்காக, எதையும் சூதில் வைக்கத் தவறமாட்டார்கள். அப்படிபொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
திருச்சியில் பிறந்து 2 மாதங்களே ஆன ஆண் குழந்தையை வைத்து சூதாடிய குழந்தையின் தந்தை, அக்குழந்தையை ரூ.80 ஆயிரத்திற்கு விற்றவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண் குழந்தை (Baby Boy)
ருச்சி உறையூர் அருகே பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் அப்துல் சலாம், இவரது மனைவி கைருன்னிசா. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அப்துல் சலாம் - கைருன்னிகா தம்பதிக்கு 5வதாக ஆண் குழந்தை பிறந்தது. சூதாட்ட பிரியரான அப்துல் சலாம், பிறந்து 2 மாதமான ஆண் குழந்தையை ஈடாக வைத்து, சூதாடி உள்ளார்.
தோல்வி (Failure)
சூதாட்டத்தில் தோல்வியடைந்ததால், குழந்தை ஒப்படைக்கப்பட்டது. குழந்தையைப் பெற்றுகொண்ட ஆரோக்கியராஜ், தொட்டியம் அருகே உள்ள கீழடி நிவாச நல்லூரை சேர்ந்த சந்திரகுமாரிடம் 80 ஆயிரம் ரூபாய்க்குக் குழந்தையை விற்பனை செய்துள்ளார்.
இது பற்றிய தகவல் அறிந்த உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வைத்து சூதாடிய அப்துல் சலாம், அதை விற்ற ஆரோக்கியராஜ், வாங்கிய சந்தன குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
மக்கள் எதிர்பார்ப்பு
எனவே சூதாட்டத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் தற்போது இளைய தலைமுறையினரை அடிமையாக்கி பல ஆயிரங்களை இழக்கச் செய்யும், , ஆன்லைன் ரம்மியைத் தடை செய்யவும் அரசு முன்வருமா என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் படிக்க...