Others

Wednesday, 05 October 2022 06:54 PM , by: R. Balakrishnan

Indian Bank Faixed Rate

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி வட்டி விகிதங்கள் 0.05% முதல் 0.50% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

வட்டி உயர்வு

சீனியர் சிட்டிசன்களுக்கு 610 நாட்களுக்கு 6.25% வட்டி என்ற ஸ்பெஷல் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தையும் இந்தியன் வங்கி வழங்குகிறது. ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரெப்போ வட்டியை 5.9% ஆக உயர்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியன் வங்கியும் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய வட்டி விகிதங்கள் (உயர்த்தப்பட்டவை மட்டும்):

  • 121 - 189 நாட்கள் : 3.85%
  • 181 நாட்கள் - 9 மாதம் : 4.5%
  • 9 மாதம் - 1 ஆண்டு : 4.75%
  • 1 ஆண்டு : 5.5%
  • 2 ஆண்டு : 5.6%

மாற்றப்படாதவை:

  • 7 - 14 நாட்கள் : 2.8%
  • 15 - 29 நாட்கள் : 2.8%
  • 30 - 45 நாட்கள் : 3%
  • 46 - 90 நாட்கள் : 3.25%
  • 91 - 120 நாட்கள் : 3.50%
  • 1 - 2 ஆண்டு : 5.5%
  • 3 - 5 ஆண்டு : 5.75%
  • 5 ஆண்டு : 5.65%

610 நாட்கள் சீனியர் சிட்டிசன் திட்டம்:

  • பொது வாடிக்கையாளர்களுக்கு : 6.10%
  • சீனியர் சிட்டிசன்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) : 6.25%
  • சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) : 6.50%

மேலும் படிக்க

இரயில் பயணிகளுக்கு இனி பிரச்சினையே இல்லை: புதிய விதிமுறைகள் வந்தாச்சு!

இரயில் பயணிகளுக்கு இனி பிரச்சினையே இல்லை: புதிய விதிமுறைகள் வந்தாச்சு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)