Others

Wednesday, 19 January 2022 11:50 PM , by: Elavarse Sivakumar

டெல்லியில் வித்தியாசமாக செய்யப்படும் மசாலா ஐஸ்க்ரீம் தோசை, உணவு ப்ரியர்களை தன்வசம் கவர்ந்து இழுத்து வருகிறது.

பசிக்கா, ருசிக்கா? (Hungry, tasteless?)

நாம் அனைவருமே ஓடி ஓடி உழைப்பது எதற்கு என்றால், இந்த அரைஜான் வயிற்றுக்காகத்தான். அதிலும் பசிக்காக சாப்பிடுபடுவர்கள் பலர், ருசிக்காக உணவை ஆசை ஆசையாக, ரசித்துச் சாப்பிடுபவர்கள் சிலர்.

அந்த சிலரைக் கவர்ந்து இழுக்க, உணவுத் தயாரிப்பாளர்களும், ஹோட்டல் அதிபர்களும் பலவித யுக்திகளைக் கையாளுகிறார்கள். அப்படி ஒரு செய்திதான் இது. பெரும்பாலானோர் தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு இடங்களிலும் கிடைக்கும் புதுவகையான, பாரம்பரியமான உணவுகள் குறித்த வீடியோக்களைப் பதிவேற்றத் தொடங்கிவிட்டனர்.

வித்தியாசமான உணவுகள் (Different foods)

மற்ற வீடியோக்களை விட இவ்வாறு பதிவிடப்படும் பல்வேறு உணவுகள் பற்றிய வீடியோக்கள் மக்களின் வரவேற்பை எளிதில் பெற்றுவிடுகிறது.
இதற்கென்றே பலரும் வித்தியாசமான உணவுகளைத் தயார் செய்யத் தொடங்கிவிட்டனர்.

ஐஸ்க்ரீம் மசாலா தோசை (Ice cream spice dosa)

அப்படி ஐஸ்க்ரீம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும், ஆனால் இங்கு தயாரிக்கப்படும் புது வகையான ஐஸ்க்ரீம் வீடியோவை பார்த்தபின் பலருக்கும் ஐஸ்க்ரீமைத் தனியாகச் சாப்பிடும் எண்ணம் வர வாய்ப்பேயில்லை.

thegreatindianfoodie என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லி ஸ்பெஷல் மசாலா தோசை ஐஸ்க்ரீம் என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், கடைக்காரர் மசாலா தோசையை எடுத்து அதை நன்கு blend செய்கிறார். பின்னர் அதன்மீது ஐஸ்க்ரீமை எடுத்து வைத்து இரண்டு கலவைகளை நன்கு மிக்ஸ் செய்கிறார்.

அவை உறைந்து ஐஸ்க்ரீம் பதத்திற்கு மாறியவுடன் அவற்றை ரோலாக எடுத்து தட்டில் வைத்து அதன் மேல் சிறிது மசாலா வைத்து அதனுடன் இரண்டு வகையான சட்னிக்களையும் வைத்து பரிமாறுகிறார்.

அமோக வரவேற்பு

இந்த வீடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது, ஐஸ்க்ரீம் மற்றும் மசாலா தோசை கலந்து உருவான இந்தக் கலவையைப் பார்த்த பலரும் இந்த ஐஸ்க்ரீமின் ருசி எப்படி உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள அந்த ஹோட்டலுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

மேலும் படிக்க...

365 வகை உணவுகள்: வருங்கால மாப்பிள்ளைக்கு விருந்து

கொரோனாத் தொற்றிலிருந்து விரைவில் விடுபட உதவும் உணவுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)