Others

Friday, 17 December 2021 03:14 PM , by: Deiva Bindhiya

Flipkart offer: 55 inch Smart TV for Rs 27,000! Do not delay

ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில், பிளிப்கார்ட் மிகவும் பிரபலமான ஷாப்பிங் தளமாகும். இங்கு வீட்டு உபயோக பொருட்கள் முதல் சாதனங்கள், ஆடைகள் என அனைத்து வகை பொருட்களும் மலிவான விலையில் கிடைக்கின்றன. மேலும் மக்களை ஈர்க்கும் விதமாக பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது பிளிப்கார்ட்.

பிளிப்கார்ட்டின்(Flipkart) பிக் சேவிங் டேஸ் விற்பனையில், தாம்சனின் 55 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.27000 தள்ளுபடி விலையில் பெறலாம். இந்த மிகப்பெரிய தள்ளுபடியை எப்படி பெறுவது என்று பார்க்கலாம். 

சிறந்த டிஸ்ப்ளே கொண்ட தாம்சனின் ஸ்மார்ட் டிவி சந்தையில் ரூ. 49,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட்டில் இந்த டிவி 30% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.34,999 என்ற விலையில் கிடைக்கிறது. SBI கிரெடிட் கார்டு மூலம் இந்த ஸ்மார்ட் டீவியை 10% அதாவது ரூ.1,500 தள்ளுபடி பெற்றுரூ.33,499-த்திற்கு வாங்கலாம்.

இந்த டீலில் பிளிப்கார்ட் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்-ஐயும் வழங்குகிறது. உங்கள் பழைய டிவிக்கு பதிலாக தாம்சன் நிறுவனத்தின், இந்த 55 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்கினால், நீங்கள் 11 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்தி, Thomson Oath Pro Series-ன்  55-இன்ச் அல்ட்ரா எச்டி (4K) LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவியை வெறும் ரூ.22,499-க்கு வாங்க முடியும். 

ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்(Features of Smart TV)

Thomson OathPro Series-ன் Ultra HD (4K) LED Smart Android TV, ஆண்ட்ராய்டில் வேலை செய்யக் கூடியது. இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியானது 3840 x 2160 பிக்சல்கள் கொண்டது மற்றும் அல்ட்ரா எச்டி (4K) டிஸ்ப்ளேவுடன் உள்ளது. இதில் 60Hz ரிஃப்ரேஷ் ரேட்-ஐயும், 30W சவுண்ட் ப்ரூஃபையும் உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியில், நீங்கள் Netflix, Amazon Prime Video மற்றும் YouTube போன்ற பயன்பாடுகளையும் பயன்படுத்தலாம்.

Flipkart இன் இந்த பிக் சேவிங் டேஸ் விற்பனை டிசம்பர் 21 வரை இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே விரைந்திடுங்கள்.

மேலும் படிக்க:

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

PMKSY: ரூ.93,068 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு நலத்திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)