Others

Sunday, 09 October 2022 10:40 AM , by: Elavarse Sivakumar

PF வாடிக்கையாளர்களுக்கு விரைவில் உங்கள் வங்கிக்கணக்கில் 81,000 ரூபாய் செலுத்தப்பட உள்ளதாக ஈபிஎப்ஓ அமைப்பு அறிவித்துள்ளது. எனவே PF வாடிக்கையாளர்கள் இந்தத் தொகையை ஆவலுடன் எதிர்நோக்கலாம்.

மாத சம்பளக்காரர்களின் பிஎப் கணக்கை நிர்வாகம் செய்யும் ஈபிஎப்ஓ அமைப்பு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர்

ஈபிஎப்ஓ அமைப்பில் பிஎப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும், அந்தந்த நிதியாண்டுக்கான வட்டி, அவர்களது வங்கிக்கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, ஈபிஎப்ஓ அமைப்பில் பிஎப் கணக்கு வைத்திருக்கும் 7 கோடி பேருக்கும் 2022 ஆம் நிதியாண்டுக்கான வட்டி தொகையை அக்டோபர் மாதத்தின் இறுதிக்குள் டெப்பாசிட் செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

8.1 சதவீதம் வட்டி

ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது போது 2022 ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க உள்ள நிலையில் பலர் 81,000 ரூபாய் அளவிலான தொகையைப் பெற உள்ளனர்.
EPFO அமைப்பு 2022ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு எவ்வளவு வட்டி தொகையைச் செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட்டு உள்ளது.

தற்போது வெளியான தகவல் படி சுமார் 7 கோடி ஊழியர்களுக்கு சுமார் 72000 கோடி ரூபாய் அளவிலான தொகையை அளிக்க வேண்டியுள்ளது. தாமதம் கடந்த வருடம் பிஎப் கணக்காளர்கள் சுமார் 6-8 மாதம் வரையில் வட்டி பணத்திற்காகக் காத்திருந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று போன்ற எந்த பெரிய பாதிப்புகளும் இல்லாத காரணத்தால் மத்திய அரசு தாமதிக்காமல் பணத்தை விரைவாகச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.81,000

8.1 சதவீதம் வட்டி வருமானம், எனக் கணக்கிட்டால், உங்கள் பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் 8100 ரூபாய் வட்டி பணம் கிடைக்கும். இதுவே 5 லட்சம் ரூபாய் என்றால் 40500 ரூபாய், 7 லட்சம் ரூபாய் என்றால் 56700 ரூபாய், 10 லட்சம் ரூபாய் என்றால் 81000 ரூபாய். உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு எவ்வளவு வட்டி வருமானம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.

தெரிந்துகொள்ள

பேலென்ஸ் தெரிந்துகொள்ள உங்கள் பிஎப் கணக்கில் இருக்கும் பேலென்ஸ் தொகையை தெரிந்துகொள்ளப் பல வழிகள் இருந்தாலும் மிஸ்டு கால் மூலம் செய்வது மிகவும் எளிதான ஒன்று. EPFO தளத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 இந்த எண்ணுக்கு அழைத்தால் மெசேஜ் வாயிலாகத் தகவல்களைப் பெறலாம். பிற வழிகள் இதைத் தொடர்ந்து EPFO ​​இணையதளம் வாயிலாகவும், UMANG செயலி வாயிலாகவும் உங்கள் பிஎப் பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும். மேலும் எஸ்எம்எஸ் வாயிலாகவும் பிஎப் பேலென்ஸ் தொகையை செக் செய்ய முடியும். 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO என்று மெசேஜ் செய்தால் போதுமானது.

மேலும் படிக்க...

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)