வங்கிக்கணக்கில் பணம் இல்லாத நிலையில், தொழிஅதிபர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஓடி வசதி, இனி பாமர மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், கொண்டுவரப்பட்டதே இந்தத் திட்டம் ஆகும். இதில், ஜீரோ பேலன்ஸ் இருந்தால்கூட உங்களால் ரூ.10,000 பெற முடியும்.
8 ஆண்டுகள்
அனைவருக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேர வேண்டும் என்பதற்காக 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிரதமர் ஜன் தன் யோஜனா (Pradhan Mantri Jan Dhan Yojana) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஜன் தன் யோஜனா அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
வங்கிக்கணக்கு
வங்கி சேவைகள், பணம் பரிவர்த்தனை, கடன், இன்சூரன்ஸ் பென்சன் போன்ற நிதி சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே ஜன் தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அனைவரும் வங்கிக் கணக்கு திறந்துகொள்ளலாம்.
ஓவர்டிராஃப்ட்
ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டியத் தேவை கிடையாது. இதுபோக ஏடிஎம் கார்டு உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கின்றன. அரசு திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு சென்று சேர ஜன் தன் கணக்குகள் பெரிதும் உதவுகின்றன. இதுமட்டுமல்லாமல், ஓவர்டிராஃப்ட் (Overdraft) வசதியும் உள்ளது.
தற்போது ஜன் தன் வங்கி கணக்குகளுக்கு 10,000 ரூபாய் வரை ஓவர்டிராஃப்ட் வசதி கிடைக்கிறது. இதற்கு முன் ஓவர்டிராஃப்ட் வரம்பு 5000 ரூபாயாக இருந்தது. பின்னர் 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
நிபந்தனை இல்லை
உங்கள் வங்கிக் கணக்கில் பணமே இல்லாவிட்டாலும் நீங்கள் 10,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். இதில் 2000 ரூபாய் வரை எடுப்பதற்கு எந்தவொரு நிபந்தனைகளும் கிடையாது. ஓவர்டிராஃப்டில் எடுக்கப்படும் தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க...
இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால், நீங்களும் லட்சாதிபதிதான்!
கர்ப்பிணியை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கணவர்!