ஜெர்மனியில் 7 வயது சிறுவனுக்காக அவதார் ரோபோ ஒன்று பள்ளிக்கூடம் செல்கிறது.
ரோபோ பயன்பாடு (Robot application)
மனிதர்களின் வேலையை எளிதாக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோக்கள், தற்போது மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் பின்னிப்பிணைந்த ஒன்றாக மாறிவிட்டது. வெளிநாடுகளைப் பொறுதத்தவரை, இந்த ரோபோக்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முதியோரைப் பராமரிக்கும் ரோபா, உணவு மற்றும் மருந்து வழங்கிப் பாதுகாக்கும் ரோபோ உள்ளிட்டவை, குடும்ப உறுப்பினராகவே மாறியிருக்கிறது.
விநோதம்
இதன் தொடர்ச்சியாகத் தற்போது சிறுவனுக்காக அவதார் ரோபோ பள்ளிக்குச் சென்று படிக்கும் வேலையையும் பார்க்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆகவேண்டும். ஜெர்மனியில் நடக்கிறது இந்த விநோதம்
7 வயது சிறுவன் (7 year old boy)
ஜெர்மன் நாட்டை சேர்ந்த சிறுவன் ஜோசுவாமார்டிங்லி. 7 வயதான இந்தச் சிறுவன் சிறிதுகாலம் முன்பு உடல்நலப் பாதிப்புக்கு ஆளானான். கடுமையான நுரையீரல் பாதிப்பு காரணமாக, கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜோசுவா, பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டது.
பள்ளி செல்லும் ரோபோ (School-going robot)
இதனால் மிகுந்த வேதனைக்கு ஆளானதாக, அவரது தாய் சிமோனி கூறுகிறார்.
இதனால் அவர் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அவருக்கு பதிலாக அவதார் என்ற ரோபோ, பள்ளிக்குச் சென்று, அவன் வீட்டிலிருந்து பாடம் படிக்க உதவி செய்து வருகிறது. ஜெர்மன் மாணவர் அவதார் ரோபோ மூலம் தனது ஆசிரியர் மற்றும் வகுப்பு தோழர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.
ரோபோ உதவியால்
ஜோசுவா அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டு பாடங்களை கவனிக்கும் அவதார் ரோபோ, ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்கு ஜோசுவா பதிலளிக்கவும் உதவுகிறது. இதனால் வீட்டிலிருந்தே ஜோசுவா தனது பாடங்களை படித்து வருகிறான்.
மனிதர்களுக்கு பதிலாக ரோபா என்ற நிலை வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க...
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மஞ்சப்பை பரோட்டா: மதுரையில் அறிமுகம்!
தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் தொடக்கி வைக்கிறார்!