Others

Tuesday, 21 December 2021 10:40 AM , by: Elavarse Sivakumar

Credit : Samayam Tamil

பொதுவாக சுடுகாட்டில் பிணங்களைப் புதைத்து வைப்பதைக் கேள்விப்பட்டிருகிறோம். ஆனால் தற்போது வேலூரில் உள்ள சுடுகாட்டில், 15 கிலோத் தங்க நகைகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றிய யோசித்தத் திருடர்கள் (Transformed thought thieves)

கொள்ளையர்கள் தாங்கள் திருடியப் பொருட்களை, திருடி அடுத்த சில மணி நேரங்களிலேயே மறைத்து வைத்து விடுவார்கள். அதே நடைமுறையைத் தான் இந்தக் கொள்ளையர்களும் கடைப்பிடித்திருக்கிறார். ஆனால் சற்று வித்தியாசமாக யோசித்த அவர்கள், அங்குள்ள ஒரு சுடுகாட்டைத் தேர்வு செய்து, பிணங்களுக்கு பதிலாகத் தங்க நகைகளைப் புதைத்து வைத்திருக்கிறார்கள்.

நகைகள் கொள்ளை (Jewellery robbery)

ஒருசில தினங்களுக்கு முன்பு, வேலூர் தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் தெருவில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடையில் துளை போட்டு, எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை (Police investigation)

கடையின் பின் பக்க வெண்டிலேட்டர் குழாய் மூலம் புகுந்து பால் சீலிங்கை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் குறித்த தடயங்களை மோப்ப நாய் மற்றும் கைரேகை நிருணர் குழுவினர் உதவியுடன் சேகரித்தனர்.

சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதுடன் பல பகுதிகளில் அதிரடி சோதனையும் நடத்தினர்.

நகரின் முக்கிய சாலைகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களையும் ஆய்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டிக்கா ராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சுடுகாட்டில் நகைகள் புதைப்பு (Burying jewellry in the crematorium)

அவரிடம் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் இருந்துக் கொள்ளையடித்த நகைகளை, ஒடுக்கத்தூர் அடுத்த உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

நகைகள் மீட்பு (Jewellry recovery)

இதையடுத்து அங்கு விரைந்தப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, புதைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு 15 கிலோ தங்க நகைகளை காவல்துறையினர் பத்திமாக மீட்டனர்.இந்த சம்பவத்தின் மூலம் இந்தச் சுடுகாடு தற்போது தங்கச்சுடுகாடாக மாறிவிட்டது.

மேலும் படிக்க...

ரிப்பேர் செய்ய ரூ.17 லட்சம் - ஆத்திரத்தில் Telsa காரை வெடிவைத்து எரித்த உரிமையாளர்!

250 நாய்களைக் கொன்றுக்குவித்த குரங்குகள்- பழிவாங்கிய சம்பவம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)