தங்கத்தை நாம் அன்றாட வாழ்வில் நகையாக வாங்காமல் பாண்டுகள், பத்திரங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தங்கச் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் தங்கத்தைப் போலவே இரு மடங்கு உயர்வு தரும். தங்கத்தில் முதலீடு செய்து 15 முதல் 20 சேமித்து வந்தால் உங்களுக்கான ஓய்வூதியத் தொகையை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகம் கிடைக்கும் என நிதி ஆலோசகர்களால் கூறப்படுகிறது.
தங்க முதலீடு (Gold Investment)
தங்கத்தை வாங்கினால் அவற்றை வீட்டில் வைக்கவும் பயம் ஏற்படும். அதைப் பொருளாக வாங்கும்போது அதற்குண்டான செய்கூலி மற்றும் சேதாரங்களுக்கு அதிக செலவிடக்கூடும். அதே மியூச்சுவல் ஃபண்ட் கோல்ட் ஈடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்தால் இவ்வகை பிரச்சனைகளும் எழாது உங்கள் தங்கமும் டிஜிட்டல் வடிவில் பாதுகாப்பாக இருக்கும்.
இன்றுள்ள காலத்தில் தங்கத்திற்கு இவ்வளவு மவுசு என்றால் அடுத்த 15 வருடங்களில் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள்தான் அதிக வருமானத்தை பெற்று தங்களின் ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக இருப்பார்கள்.
அதனால் மியூச்சுவல் ஃபண்டில் சிறந்த கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளில் (Gold ETF Fund) உங்கள் நிதி ஆலோசகரின் உதவியுடன் உங்களின் வருமானத்திற்கேற்ற சிறந்த ஃபண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள், உங்கள் ஓய்வுக் காலத்தை நிம்மதியாக கழியுங்கள்.
Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க
தொழில்முனைவோருக்கு சிறப்பு முகாம்: மிஸ் பன்னாதிங்க!
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!