சர்வதேச சந்தை நிலவரம் காரணமாமக, கடந்த 4 நாட்களில் ஆபரணத் தங்கம் 752ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தரவாசிகள் உள்ளிட்ட பலர், இப்போதைக்கு தங்கம் வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.
அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.
இந்நிலையில், நகை பிரியர்களை அதிர வைக்கும் வகையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் 4 நாட்களில் கிராமுக்கு 752 ரூபாய் அதிகரித்துள்ளது.
ஆபரணத் தங்கம்
சென்னையில் தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூயத் தங்கம்
ஒரு கிராம் தூயத் தங்கம் (24 கேரட்) 5,318 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூயத் தங்கம் 42,544ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4825க்கும், ஒரு சவரன் தங்கம் 38,600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆக 4 நாட்களில் கிராமுக்கு 752ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கத்தின் இந்தக் கிடு கிடு விலைஉயர்வு, கல்யாணம் வைத்திருப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மேலும் படிக்க...
பிளாஸ்டிக் கவரில் ஊற்றிக் கொடுக்கும் சூடான உணவை சாப்பிடலாமா?
பழங்களின் தோல்களை வீசாதீர்கள்- இத்தனை ஊட்டச்சுத்துகள் இருக்கு!