தமிழகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 40 ஆயிரம் ரூபாயை நெருங்கியிருந்த நிலையில் திடீரென அதிரடியாகக் குறைந்துள்ளது. 2 நாட்களில், சவரனுக்கு 512 ரூபாய் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.எனவே திருமணம் வைத்திருப்பவர்கள், உடனடியாக தங்க நகைக்கடைக்குச் சென்று ஆபரணத் தங்கத்தை வாங்கலாம்.
தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது.
குறிப்பாக ரஷியா- உக்ரைன் இடையே போர் தொடர்வதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் பக்கமே இருக்கிறது. இதன் காரணமான முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது.
அதிரடி சரிவு
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆபரணத் தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,945க்கும், ஒரு சவரன் ரூ.39,560க்கும் விற்பனையானது.ஆனால் 2 நாட்களில் அதிரடியாகக் ரூ.512 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.39,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ.4,881க்கு விற்பனையாகியது.
திருமண சீசன் துவங்கியுள்ள நிலையில், திருமணம் வைத்திருப்பவர்களுக்கு, தற்போது தங்கம் வாங்குவதற்கு உகந்த தருணமாக இருக்கும். எனவே சீதனமாகக் கொடுக்க வாங்க வேண்டிய நகைகளை இப்போதே வாங்கி வைத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க...