தமிழகத்தில் ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை 856 ரூபாய் அதிகரித்தது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. குறிப்பாக திருமண சீசன் தொடங்கிவிட்ட நிலையில், தங்கம் விலையில் நிலவும் அதிரடி மாற்றம் திருமணம் வைத்திருப்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தங்கத்திற்கு மவுசு
எத்தனைதான் அணிகலன்களை அணிந்தாலும், தங்கம்தான் நமக்குத் தனி கவுரவத்தை உருவாக்கித்தருகிறது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தை அணிகலனாக மாற்றி அணியும்போது, பெண்களுக்கு தனி அழகும், புத்துணர்ச்சியும், பெருமையும் கிடைக்கிறது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஏற்ற -இறக்கம்
அந்த வகையில், சர்வதேச சந்தையில் நிலவிவரும் விலை மாற்றத்திற்கு ஏற்ப சென்னையிலும் தங்கத்தின் விலையில் ஏற்ற -இறக்கம் இருந்து வருகிறது.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தால், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் கருத்தில்கொண்டு, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
திடீர் அதிகரிப்பு
இதனால், தங்கத்தின் விலை கிடு கிடுவென அதிகரித்து வருகிறது.கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த ஆபரணத் தங்கம் இன்று ஒரேநாளில், சவரனுக்கு 856ரூபாய் உயர்ந்தது.
சென்னையில் இன்று , 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் 4,785 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் 4,678 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 37, 424 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
திருமண சீசன் காலங்களில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்து வருவது, திருமணம் நடத்த உள்ளவர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கும் இந்த விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...