
பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி அதிகரித்த நிலையில், வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளன. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி 36 நாட்களில் இருமுறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
வட்டி உயர்வு (Interest Rate Increased)
வட்டி உயர்வால் வீடு, வாகன தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளன. அதேநேரம் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தியாக அவர்கள் வங்கிகளில் வைத்திருக்கும் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களும் 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, சாதாரண மக்களின் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 2.90 சதவிகிதம் முதல் 5.50 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது. மூத்த குடிமக்களின் டெபாசிட்களுக்கு 6.30 சதவிகிதம் வரை வட்டி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல பஞ்சாப் நேஷனல் வங்கி கனரா வங்கிகளும், தனியார் வங்கிகளில் ஹெச்.டி.எஃப்.சி., கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கிகளும் டெபாசிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
வங்கிகளில்
டெபாசிட்களுக்கான வட்டி அதிகரிப்பில் சாதாரண குடிமக்களுக்கான வட்டி மற்றும் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் கீழே தரப்பட்டுள்ளது.
- எஸ்.பி.ஐ. : 2.90% - 5.50% 3.40% - 6.30%
- பஞ்சாப் நேஷனல் வங்கி : 3% - 5.5% 3.50% - 6%
- கனரா வங்கி : 2.90% - 5.75% 2.90% - 6.25%
- ஹெச்.டி.எஃப்.சி. : 2.75% - 5.75% 3.25% - 6.50%
- கோட்டக் மஹிந்திரா : 2.50% - 5.90% 3% - 6.56%
மேலும் படிக்க