Others

Tuesday, 02 August 2022 02:39 PM , by: R. Balakrishnan

Good news for policyholders

இன்சூரன்ஸ் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவதற்கு இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றங்கள் இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருதரப்பினருக்குமே சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்சூரன்ஸ் (Insurance)

இன்சூரன்ஸ் பாலிசிகளை டீமாட் வடிவில் வைத்து பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க IRDAI திட்டமிட்டுள்ளது. டீமாட் என்றால் என்ன? பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவை டீமாட் கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். பங்குகளை வாங்கினாலும், விற்றாலும் டீமாட் கணக்கு வழியே பரிவர்த்தனை நடக்கும்.

இந்நிலையில், பங்குகளை போலவே இன்சூரன்ஸ் பாலிசிகளையும் டீமாட் வடிவில் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு IRDAI திட்டமிட்டுள்ளது. டீமாட் கணக்கு மட்டுமல்லாமல் பாலிசிதாரரின் வங்கிக் கணக்குடனும் இன்சூரன்ஸ் பாலிசி இணைக்கப்பட்டிருக்கும்.

என்ன மாற்றம் (What Change)

எளிமையாக சொன்னால், ஒரு நேரடி ஆவணமாக உள்ள உங்களது இன்சூரன்ஸ் பாலிசி ஆன்லைன் ஆவணமாக மாறிவிடும். இதனால், பாலிசியை புதுப்பிப்பதும் எளிதாகும்; பேப்பர் வேலைகள் குறையும்.
இதனால் பாலிசிதாரர், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருதரப்பினருமே பயனடைவார்கள். மேலும், கூடுதல் செலவுகளை குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

எஸ்பிஐ vs அஞ்சலகத் திட்டம்: எது பெஸ்ட்?

PF கணக்கில் 40,000 ரூபாய் டெபாசிட்: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)