தேசிய பென்சன் திட்டத்தின் இரண்டாம் நிலை கணக்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்த அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு இந்தப் பென்சன் திட்டப் பயனாளிகள் அனைவரையும் அதிர்ச்சை அடையச் செய்துள்ளது.
விதிகளில் மாற்றம்
தேசிய பென்சன் திட்டத்தில் (NPS) முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA மாற்றியுள்ளது. இதன்படி, பென்சன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலான பங்களிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பென்சன் திட்டம்
முதலில் அரசு ஊழியர்களுக்காக தேசிய பென்சன் திட்டம் 2004ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் இதில் பயனாளிகளாக இருந்து வந்தனர்.
தனியார் ஊழியர்களுக்கு அனுமதி
பிற்காலத்தில் தேசிய பென்சன் திட்டத்தில் தனியார் துறை ஊழியர்களும் முதலீடு செய்ய அரசு அனுமதி அளித்தது. தற்போதைய சூழலில் தனியார் ஊழியர்கள் மத்தியில் தேசிய பென்சன் திட்டம் மிக அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இரண்டு வகை
தேசிய பென்சன் திட்டத்தில் முதல் நிலை கணக்கு (Tier-I Account), இரண்டாம் நிலை கணக்கு (Tier-II Account) என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன.
கிரெடிட் கார்டுக்கு தடை
இந்நிலையில், தேசிய பென்சன் திட்டத்தின் பயனாளிகள் இரண்டாம் நிலை கணக்குகளுக்கு கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துவதற்கு PFRDA தடை விதித்துள்ளது.
மேலும் படிக்க...
100 ரூபாய் எடுத்தவருக்கு ரூ.2700 கோடி கிடைத்ததாக வந்த வங்கி SMS!!