சென்னைத் தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு உத்தியோகம்
என்னதான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து சம்பளம் வாங்கினாலும், அரசு உத்தியோகத்தின் மதிப்பே தனிதான். அதனால்தான் அரைகாசு சம்பளமானாலும், அரசாங்க காசாக இருக்க வேண்டும் என்றுக் கூறினார்கள். இருப்பினும் தற்போது, இளைய தலைமுறையினரிடையே அரசு வேலையின் மீது தனி ஈர்ப்பும், ஆர்வமும் வந்துள்ளது.
நிர்வாகம்
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
பணி:
அலுவலக உதவியாளர் (Office Assistant)
காலியிடங்கள் (Vacancy)
02
சம்பளம் (Salary)
மாதம் ரூ.15,700- 58,100
தகுதி (Educational Qualification)
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு (Age limit)
01.01.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை( Selection Process)
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை(How to apply)
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கும் விண்ணப்பிக்கலாம்
முகவரி (Address)
அரசு சார்புச் செயலாளர், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009.
கடைசி தேதி (Deadline)
10.12.2021
மேலும் விவரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in/ அல்லது https://cms.tn.gov.in/sites/default/files/job/OA_Recruitment_251121.pdf</span></a></strong> என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்தும் தெரிந்துகொள்ளவும்.
மேலும் படிக்க...
ஆடுகளின் தேவை சரிந்தது, சிக்கலில் விவசாயிகள்
வெறும் 53,000 ரூபாயில் முதலில் ரூ.35 லட்சம் சம்பாதிக்கலாம்