அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) பயனாளிகள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க வேண்டும் எனவும், அப்படி இணைக்கத் தவறினால் ஓய்வூதிய கணக்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டம் (National Pension Scheme)
அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தேசிய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கிறது. இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருமே அடங்குவர். இது போக தனியார் துறை ஊழியர்களும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆதார் - பான் இணைப்பு (Aadhar Pan Card Linking)
இந்திய குடிமக்கள் அனைவருமே ஆதார் மற்றும் பான் கார்டை கட்டாயமாக இணைக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. அவ்வகையில், தேசிய ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்களும் ஆதார் - பான் இணைக்க வேண்டும் என பென்சன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA உத்தரவிட்டுள்ளது. ஆதார் - பான் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதியை வரும் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய அரசு. இருப்பினும், ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்க 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது அவசியம்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் உறுப்பினர்கள் வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார் - பான் இணைக்கவில்லை என்றால், அது விதிமீறலாக கருதப்பட்டு ஓய்வூதிய கணக்கு பரிவர்த்தனைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் PFRDA எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க
வீட்டில் இருந்து கொண்டே புதிய ரேசன் கார்டை வாங்கலாம்: எப்படித் தெரியுமா?
பழைய பென்சன் திட்டம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தனர் தமிழக அரசு ஊழியர்கள்!