Others

Tuesday, 12 July 2022 05:24 PM , by: Deiva Bindhiya

Govt should focus on doubling farmer income - Kalyan Goswami

அக்ரோ கெமிக்கல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா-வின் பொது இயக்குநர் கல்யாண் கோஸ்வாமி கிரிஷி ஜாக்ரன் ஊடக நிறுவனத்திற்குச் வருகை தந்தார். அங்கு உரையாற்றிய அவர், உழைக்கும் விவசாயியின் வியர்வைக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்றார். உரிய ஏற்பாடுகளை செய்து விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

டெல்லியில் உள்ள கிரிஷி ஜாக்ரன் மீடியாவின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பேசினார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றமும் இன்றைய அவசரத் தேவைகளில் ஒன்றாகும்.

விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் உரிய ஆதரவு விலை, சந்தை விலை, சிறந்த சந்தைப்படுத்தல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு தொடர்ந்து சவாலாக இருக்கும் தரகர்களின் அச்சுறுத்தல், கலப்பட உரங்கள், தரமற்ற விதைகள் விற்பனையை தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மனிதர்கள் மட்டுமல்ல, இயற்கையும் விவசாயிகளை பாதிப்படையச் செய்கிறது. கன மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற சூழ்நிலைகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு நிற்க வேண்டும்.

பயிர்கள் வளர்ந்து சேதமடையும் போது விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வகையில், காப்பீடு மற்றும் பயிர் சேத இழப்பீடுகளை தாமதமின்றி அரசு வழங்க வேண்டும் என்றார்.

Weather Update:
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

பின்னர் பேசிய கிருஷி ஜாக்ரன் மீடியாவின் நிறுவனரும் ஆசிரியருமான எம்.சி.டோம்னிக், கிருஷி ஜாக்ரன் வளர்ந்த பாதையை விளக்கினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விவசாய விழிப்புணர்வுப் பேரணியில் இருந்து இன்று வரை விவசாய ஊடகங்கள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் குறித்து பேசினார்.

அறிவியல் ஆய்வு அவசியம்
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு மற்றும் இழப்பீடு போதுமானதாக இல்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் ஒன்றிணைந்து விவசாயத்தை எளிதாக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்.

இதன் மூலம் நோய்கள், பூச்சிகள், பயிர் இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, எந்தெந்த நேரத்தில் எந்தெந்த பயிர்களை எந்த அடிப்படையில் பயிரிட வேண்டும் என விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

வெள்ளாடு, செம்மறியாடு மற்றும் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி

ரசாயனமில்லா விவசாயம் குறித்து ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாமல், அந்த விவசாய முறையை கடைப்பிடிக்கும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டதோடு, அவற்றிற்கு தீவிரமாக தீர்வு காண வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த அக்ரோ கெமிக்கல் பெடரேஷன் ஆஃப் இந்தியா-வின் பொது இயக்குநர் கல்யாண் கோஸ்வாமி மற்றும் அவரது செயலாளர் சிம்ரன் கவுர் ஆகியோரை கிரிஷி ஜாக்ரன் நிறுவனத்தினோர், மரக்கன்றுகள் வழங்கி வரவேற்றனர்.

வேளாண் விஜிலென்ஸ் டாக்டர் சிஓஓ. பி.கே. பந்த் நன்றி உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கிரிஷி ஜாக்ரன் ஊடக இயக்குநர் ஷைனி டோம்னிக், உள்ளடக்கத் தலைவர் சஞ்சய் குமார், நிஷாந்த் தக் மற்றும் கிரிஷி ஜாக்ரன் குழுவினர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க:

Bangalore தக்காளி ரூ.12க்கு விற்பனை! நாட்டு தக்காளியின் விலை என்ன?

தக்காளி காய்ச்சல் குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)