மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை எனப்படும் Gratuity, 30 நாட்களாக உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு பணிக்கொடை எனப்படும் Gratuity வழங்கப்படுவது வழக்கம். தனியார் நிறுவனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.இந்த Gratuity என்பது, ஊழியர்கள் கடைசியாக வாங்கும் சம்பளத்தைக் கருத்தில்கொண்டுக் கணக்கிடப்படுகிறது. அதாவது ஆண்டுக்கு 15 நாட்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும்.
இந்நிலையில் இந்த Gratuity தொகையை 30 நாட்களாக உயர்த்த மத்திய அரசுத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாயின. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் மறுப்பு
இது தொடர்பாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி கூறுகையில், அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படும் என்றும், அதை 30 நாட்களாக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இத்தகவலை அவர் வெளியிட்டார். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு பணிக்கொடை கிடைக்குமா என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராமேஸ்வர் தெலி, சமூக பாதுகாப்பு சட்டம் - 2020இன் படி, ஒரு பணியாளரின் பணிநீக்கம், குறிப்பிட்ட காலத்திற்கு பணிநீக்கம் அல்லது இறப்பு அல்லது இயலாமை ஆகியவற்றின் காரணமாக பணிக்கொடை வழங்கப்படாமல் இருக்காது என்று தெரிவித்தார்.
பணிக்கொடை என்பது பணிக்கொடைச் சட்டம் 1972ன் கீழ் ஊழியர்கள் பெறும் பலன் ஆகும். ஒரு நிறுவனம் அல்லது முதலாளி தனது பணியாளரின் பணிக்கு ஈடாக தனது பணியாளருக்குச் செலுத்தும் சம்பளத்தின் ஒரு பகுதியை பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, நிறுவனத்தின் சார்பாக பணிக்கொடை வழங்கப்படுகிறது. சேவை ஆண்டு x கடந்த மாத சம்பளம் x 15/26 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் பணிக்கொடை கணக்கிடப்படுகிறது.
மேலும் படிக்க...
இல்லத்தரசிகளுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசம்- மாநில அரசு முடிவு!