டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம் என ஆணையம் அறிவித்துள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கான தேர்வையும் வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு
குரூப் 4 பதவிகளுக்கான விண்ணப்பச் செயல்முறை முடிவுற்று, வருகின்ற ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இந்தநிலையில், குரூப் 4 பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, குரூப் 4 பதவிக்கு விண்ணப்பிக்கும்போது பதிவேற்றிய சான்றிதழ்களை மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு பெரும்பாலானோர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றுகளை பதிவேற்றியிருப்பர்.
இந்தநிலையில், விண்ணப்பதாரர்கள் மீண்டும் அந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த சான்றிதழ் பதிவேற்றவதை குறிப்பிட்ட சில விண்ணப்பதாரர்கள் மீண்டும் செய்ய வேண்டும்.
பதிவேற்றம் எப்படி?
விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று, நிரந்தரப் பதிவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர், உங்கள் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, உள் நுழைய வேண்டும்.
அங்கு டாஷ்போர்டில், குரூப் 4 PSTM என்பதை கிளிக் செய்து, மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்ற வேண்டும். அதே நேரம் இந்த டாப், இல்லாமல் PSTM Documents என்று மட்டும் இருந்தால், பதிவேற்றம் செய்ய தேவையில்லை.
அதேநேரம், குரூப் 7பி மற்றும் குரூப் 8 பதவிகளுக்கு, நிரந்தரப் பதிவில் Current Application என்ற டாப்-பில் View Documents என்பதை கிளிக் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் பதிவேற்ற வேண்டும்.
கடைசித் தேதி
இந்தப் பதவிகளில் சில விண்ணப்பதாரர்களுக்கு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, சாதிச் சான்றிதழ், தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பதிவேற்ற செய்ய வேண்டியிருக்கும்.
சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் 28.08.2022 க்குள் இந்த சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
சிகரெட் பிடிக்கும் காளி- வைரல் ஆகும் விபரீதம்!
வீடு வாங்கப் பணத்திற்கு பதிலாக தர்பூசணி- மகிழ்ச்சியில் விவசாயிகள்!