இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முன்னணி விவசாய ஊடகங்களில் ஒன்றான கிரிஷி ஜாக்ரன், 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான இந்தியப் பிரதமரின் அழைப்பை ஏற்று, அதன் நிறுவனத்திற்குள் ஒரு முயற்சியைத் தொடங்கியது.
'மாற்றம் வீட்டிலிருந்து தொடங்குகிறது,' என்று சொல்வது போல் – KJ குடும்பத்தின் ஒவ்வொரு பணியாளரும் இந்தியக் கொடியை ஏந்தி அதை பறைசாற்றுவதில் பெருமைப்படுவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, கிரிஷி ஜாக்ரன் மற்றும் அக்ரிகல்ச்சர் வேர்ல்ட் வெளியீடுகளின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் திரு. எம்.சி டாம்னிக் தனது ட்விட்டர் பக்கத்தில்; “நம் நாட்டிற்கான, இத்தகைய மாபெரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன், எனவே நாடு முழுவதும் உள்ள எங்கள் ஊழியர்கள் அனைவரும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதை உறுதிசெய்கிறோம், மேலும் நமது 'மூவர்ணக் கொடியினை' கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவின் USP மற்றும் KJ-க்கும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது பதிவில், “ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இந்திய விவசாயியும் கொடியை ஏற்றுவதை உறுதிசெய்யவும், இந்த #HarGharTiranga இயக்கத்தை, மேலும் வலுவாக மாற்றவும் கிருஷி ஜாக்ரன் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்யும். எங்களின் நோக்கம் எப்போதும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுப்பதே, இங்கும் அதையே செய்ய உள்ளோம். அவர்கள் இந்த வளர்ந்து வரும் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க பகுதியாக உள்ளனர் என்பதில் மாற்று கருத்தே கிடையாது, எனவே அவர்களையும் இணைத்து ஒன்றாக நடக்க தயாராக உள்ளோம், எனவும் குறிப்பிட்டார்.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து, கிட்டத்தட்ட 12 மொழிகளில் செய்திகளை வழங்கும் கிரிஷி ஜாக்ரன் குழுக்கள் - வீடியோ, அச்சு மற்றும் ஆன்லைனில் - பிரதமர் மோடியின் #HarGharTiranga இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் உணர்வில் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், ஹர் கர் திரங்காவையும் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது. hargartiranga.com என்ற இணையதளத்தில் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் பெருவிழாவைக் குறிக்கும் வகையில் கலாச்சார அமைச்சகத்தின் முன்முயற்சி மற்றும் அமைச்சகத்திடம் இருந்து பாராட்டுச் சான்றிதழைப் பெறுதல் போன்ற நிகழ்வு, நம் ஆர்வத்தை தூண்டுகிறது. ஆம், இது ஒரு பிரமிக்க வைக்கும் அங்கீகாரம்! இந்த அங்கீகரிக்கபட்ட சான்றிதழை நிங்களும் பெறலாம். அதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும், கீழே பதிவில் பாருங்கள்.
Aspirations of a billion plus are enshrined in this flag. Let us hold it high.@icarindia, @nstomar, @PRupala, @KailashBaytu, @narendramodi, @PMOIndia @ShobhaBJP @AgriGoI @PIB_India @mygovindia @drsanjeevbalyan @AmitShah @AmitShahOffice @rajnathsingh pic.twitter.com/0f2ErZcw6S
— M C Dominic (@dominickrishi) August 3, 2022
"அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆகஸ்ட் 15, 2022 வரை எங்களிடம் நிறைய திட்டங்கள் மற்றும் ஆச்சரியங்கள் உள்ளன. நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன், எங்கள் அணிகளும் கூட," என்று திரு. டாம்னிக் தெரிவித்தார்.
அனைத்து KJ குழு உறுப்பினர்களும் தங்கள் சமூக ஊடக தளங்களில் தங்கள் DPகளை மாற்றுகிறார்கள். உங்கள் அனைவரையும் அவ்வாறே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.
https://hargartiranga.com/ என்ற இணைப்பைக் கிளிக் செய்து, ஒரு கொடியைப் பொருத்தவும் அல்லது கொடியுடன் செல்ஃபியைப் பதிவேற்றவும் மற்றும் இந்தியாவின் 75வது சுதந்திர இயக்கத்தின் ஒரு பகுதியாக இருங்கள். உணர்வை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்! ஏன், இந்த பிரச்சாரம் ஆகஸ்ட் 2, 2022 துவங்கியதன் காரணமும் அறிந்திடுங்கள். நமது தேசியக் கோடியினை வடிவமைத்த, பிங்கிலி வேங்கையா-இன் பிறந்தநாளாகும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க:
Flag Code Of India: சொல்வது என்ன? அறிந்திடுங்கள்!
Taiwan: சீன போர் விமானங்களும், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின்பயணமும்...