பெரும்பாலானோரிடம் கிரெடிட் கார்டு உள்ளது. ஆனால் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் நிறையப் பேருக்கு அதன் அம்சங்கள் பற்றித் தெரிவதில்லை. கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சாப்பாட்டுச் செலவில் ஆயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், பெரும்பாலான கிரெடிட் கார்டுகளில் இந்த அம்சம் உள்ளது. ஆனால் மக்களுக்கு அதுபற்றித் தெரியாது.
கிரெடிட் கார்டு (Credit Card)
இந்த அம்சத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கான உங்கள் செலவைக் குறைக்கலாம். நீங்கள் விமானத்தில் எங்காவது பயணம் செய்கிறீர்கள் என்றால், விமான நிலைய ஓய்வறைகளில் இந்த அட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. விமான நிலையத்தில் டீ, காபி, மதிய உணவு மற்றும் இரவு உணவு எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இந்த அட்டைகள் மூலம் நீங்கள் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களின் ஓய்வறைகளில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.
உங்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கார்டு நெட்வொர்க் நிறுவனங்கள் ஓய்வறைகளுடன் ஒப்பந்தம் செய்திருப்பதால், இந்த அட்டை மூலம் விமான நிலைய ஓய்வறைகளுக்கு நீங்கள் இலவச நுழைவைப் பெறுவீர்கள். இதன் மூலம் கார்டு வைத்திருப்பவர் அதிக பலன்களைப் பெறலாம். சில கிரெடிட் கார்டுகள் உள்நாட்டு விமான நிலையத்தில் மட்டுமே இந்த வசதியை வழங்குகின்றன.
HDFC வங்கி மில்லினியா டெபிட் கார்டு (HDFC Bank Millennia Debit & Credit Card) மிகவும் பிரபலமான அட்டையாகும். இதில் நிறைய அம்சங்கள் உள்ளன. அதேபோல, ஐசிஐசிஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டிலும் இலவச அணுகலைப் பெறுவீர்கள். இதுபோன்ற நிறைய கிரெடிட் கார்டுகளில் நிறைய சலுகைகள் உள்ளன. எனவே கார்டு வாங்கும்போதே அதுகுறித்து தெரிந்துகொண்டு பயன்படுத்தினால் சிறந்தது.
மேலும் படிக்க
புதுசா முதலீடு செய்பவரா நீங்கள்? எதுல முதலீடு பண்ணா அதிக லாபம் வரும்!