ஐஸ்க்ரீம் என்றாலே சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் புட்டு ஐஸ்கிரீம் என்றால் கேட்கவா வேண்டும். எல்லா வயதினரும் சாப்பிட்டுப் பார்க்க ரெடிதான். அப்படியானால், இந்தப் புதுமையான புட்டு ஐஸ்க்ரீமை ருசிக்க நீங்கள் கேரளாவிற்குத் தான் போக வேண்டும்.
தென்னிந்தியாவில் தமிழக மற்றும் கேரள காலை உணவுகளில் அதிகம் இடம் பெறும் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது புட்டு. நம்மூருல இட்லி தட்டுல போட்டு வேக வைப்பதைப் போல, கேரள மக்கள் குழாய்புட்டு செய்கிறார்கள்.
இதை மனதில் வைத்துக்கொண்டு, புட்டு ஐஸ்க்ரீமை தயாரித்து விற்பனை செய்ய முன்வந்துள்ளார் கேரள வாலிபர் ஒருவர்.
புட்டு ஐஸ்க்ரீம்
அவர் நடத்தும் Foodie World என்று அழைக்கப்படும் யூடியூப் சேனலில் புட்டு ஐஸ்க்ரீம் பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
தயாரிப்பது எப்படி?
புட்டு சட்டியில் அரிசி மாவு போடுவதற்கு பதிலாக ஐஸ்க்ரீமையும், இடையில் நிரப்ப தேங்காய் துருவலுக்கு பதிலாக கார்ஃப்ளேக்ஸ் மற்றும் சாக்கோசிப்களையும் பயன்படுத்தி இந்த புட்டு ஐஸ்க்ரீம் தயாரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் பலூடா என்ற உணவகம் கேரளாவில் தாங்கள் வைத்துள்ள 11 கிளைகளில் இந்த புட்டு ஐஸ்க்ரீமை விற்பனை செய்து வருகிறது.
சமூகவலைதளங்களில் இந்தப்புட்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், மக்கள் இதனைத் தேடி வந்துச் சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். குறிப்பாக ஐஸ்க்ரீம் ப்ரியர்கள் கேரளாவை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
மேலும் படிக்க...