Others

Tuesday, 10 January 2023 10:19 AM , by: R. Balakrishnan

Senior citizens Scheme

அனைவருக்குமே தாங்கள் வயதான பின்னர் கடைசிக் காலத்தில் தங்களுடைய பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்களா, இறுதிக் காலத்தில் வாழ்க்கையை ஓட்டுவது போன்ற அச்சம் இருக்கும். கடைசிக் காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்து நிற்காமல் தங்களது செலவுகளைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதேனும் நிதி ஆதாரம் இருந்தால் நல்லது. அதற்காகவே நிறைய பென்சன் திட்டங்களும் சேமிப்புத் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior citizens savings scheme)

அவற்றில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சேமிப்புத் திட்டங்களில் இது பிரபலமான ஒரு திட்டமாகும். வங்கிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இத்திட்டம் உங்களுக்கு கடைசிக் காலத்தில் பெரும் உதவியாக இருக்கும். அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
அருகிலுள்ள தபால் நிலையத்திலேயே நீங்கள் இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். வங்கிகளைப் பொறுத்தவரையில், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட முன்னணி வங்கிகளில் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

தற்போது இத்திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 சதவீதமாக உள்ளது. சமீபத்தில்தான் இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. 55 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒரு நபருக்கு 5 வருட காலத்திற்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் திறக்கலாம். இத்திட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ திறக்கலாம். ஆனால் அதிகபட்ச முதலீட்டு வரம்பு 15 லட்சத்தை தாண்டக்கூடாது. 1000 ரூபாய் செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வுக்குப் பின் ஏற்படும் செலவுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்படுகிறார்கள். உண்மையில், ஓய்வுக்குப் பிறகு பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் உங்களுடைய பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். மூத்த குடிமக்கள் தங்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இப்போதிருந்தே சரியான சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம். அதற்கு இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.

மேலும் படிக்க

பென்சனுக்கு உதவும் தங்க முதலீடு: 100% லாபம் உறுதி: உங்களுக்கு தெரியுமா?

தொழில்முனைவோருக்கு சிறப்பு முகாம்: மிஸ் பன்னாதிங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)