ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் முதலாளிகளுடன் சேர்ந்து மே 3, 2023 க்குள் அதிக ஓய்வூதியத்திற்கு கூட்டாக விண்ணப்பிக்க முடியும். இதற்காக ஓய்வூதிய நிதி அமைப்பின் ஒருங்கிணைந்த உறுப்பினர் போர்ட்டலில் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதன் மூலம் ஓய்வூதியம் வரம்பு என்பது 15,000 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- e- sewa போர்ட்டல் பக்கத்தில் உறுப்பினர்கள் நுழையவும்.
- pension on higher salary என்பதை கிளிக் செய்யவும்.
- ஜாய்ண்ட் ஆப்சன்ஸ் என்ற பார்மினை தேர்வு செய்யவும்
- இது புதிய பக்கத்தில் தொடங்கும். இதில் UAN, பெயர், பிறந்த தேதி, ஆதார் நம்பர், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் கேப்ட்சா உள்ளிட்ட விவரங்களையும் பதிவிட வேண்டியிருக்கும்.
- இந்த பார்மினை பூர்த்தி செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
என்னென்ன தேவை?
இதில் பதிவு செய்யப்படும் தகவல்கள் UAN-ல் இருப்பதை போல சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக பெயர், ஆதார் எண், பான் எண், பிறந்த தேதி ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அதேபோல் கட்டாயம் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அவசியம். இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே 3 என்றாலும், இதுவரையில் 8000-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.
அதிக ஊதியத்தில் பணியாளர் மற்றும் பணி வழங்குபவர் ஆகிய இருவரின் பங்களிப்பும் சம்பந்தப்பட்டிருப்பதால், இபிஎப் மற்றும் இபிஎஸ்-95 திட்டங்களுக்கு அவர்கள் அதிக சம்பளத்தில் பங்களிக்கும் போது கூட்டுக் கோரிக்கை தேவைப்படுகிறது. இது உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.
தகுதியானவர்கள்
செப்டம்பர் 1, 2014 க்குப் பிறகு ஓய்வு பெற்ற ஊழியர்களும், அதாவது 1995 இன் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்புக்கு அப்பாற்பட்ட உண்மையான சம்பளத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம். இபிஎஃப் திட்டத்தின் உறுப்பினராக, ஒரு ஊழியர் ஓய்வுபெறும் போது , 58 வயதை தொட்ட பிறகு ஓய்வூதியம் பெறுவதற்கான உரிமையைப் பெற தகுதியுடையவர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
தங்கம் வாங்கும் பொதுமக்களே: இனி இதைப் பார்த்து தான் வாங்கனும்!
பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்: விரைந்து விண்ணப்பிக்கவும்!